ஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி..
ஏப்ரல் 27,2008,00:00 IST
பட்டப்படிப்புகள்
, பட்ட மேற்படிப்புகள் மற்றும் பெல்லோஷிப்கள் என அனைத்து வெளிநாட்டுப் படிப்புகளுக்கும் அடிப்படைத் தகுதியாகக் கேட்கப்படுவது ஜி.ஆர்.ஈ., தான். இதை அமெரிக்காவிலுள்ள எஜூகேஷனல் டெஸ்டிங் சர்வீசஸ் என்னும் அமைப்பு நடத்துகிறது. இது 2 தாள்களாக நடத்தப்படுகிறது. பகுப்பாய்வுத்திறன், அனலிடிகல் திறன்,வெர்பல் ரீசனிங், கணிதத் திறன் போன்றவை ஒரு பகுதியாகவும் எந்த பாடத்தில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறோமோ அது மற்றொரு பிரிவாகவும் நடத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
ஆங்கில பயிற்றுவித்தலில் சிறப்புப் படிப்புகள் தொலை தூ
ர கல்வி முறையில் தரப்படுகின்றனவா?
வரும் ஜூன் மாதம் தொடங்கப்படவிருக்கும் ஒரு ஆண்டு பட்டயப்படிப்பு ஒன்றை பெங்களூருவில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் இங்கிலீஷ் அறிவித்துள்ளது
. பி.ஜி., டிப்ளமோ இன் இங்கிலீஷ் லாங்வேஜ் டீச்சிங் என்பது இதன் பெயர். இதற்கான கட்டணம் ரூ.9000.
இதே நிறுவனம் கம்யூனிகேஷனிலும் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பைத் தருகிறது
. இதற்கான கட்டணம் ரூ.3000 மட்டுமே. விண்ணப்பக் கட்டணம் ரூ.250. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Director, Regional Institute of English South India, Jnanabharati Campus, Bangalore 560 056
.