குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி | Kalvimalar - News

குறைந்த கட்டணத்தில் தரமான கல்விஏப்ரல் 25,2019,11:53 IST

எழுத்தின் அளவு :

குறைந்த கல்விக் கட்டணத்தில் தரமான பொறியியல் கல்வி என்ற உன்னத நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எங்களது கல்வி நிறுவனம், ஒரு ஆங்கில வார இதழ் நடத்திய ஆய்வின்படி, செலவு குறைந்த தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது!

கல்லூரி என்பது பாடங்கள் சார்ந்த அறிவை மட்டும் வளர்க்கும் இடமாக இருக்கக்கூடாது. வகுப்பறை பாடத்திற்கும் அப்பாற்பட்டு அறிவை வளர்க்கும் மையமாக செயல்பட வேண்டும். இதற்கு முக்கியத்துவம் அளித்தே, எங்களது கல்லூரியில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, கல்லூரி வளாகத்திலேயே செயல்படும் ‘நேஷனல் சைபர் டிபன்ஸ் ரிசர்ச் சென்டர்’, மாணவர்களின் ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பு திறனுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தின் உதயத்தால், நாட்டிற்கு தேவையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் வகையில் அக்ரி இன்ஜினியரிங், பயோ இன்ஜினியரிங்,  பயோ-டெக் இன்ஜினியரிங் உட்பட பல்வேறு துறை சார்ந்த ‘புராஜெக்ட்’களை மாணவர்களால் மேற்கொள்ள முடிகிறது. 

பிரத்யேக பயிற்சி

இத்தருணத்தில், இன்றைய மாணவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். சிறப்பான முறையில், இன்ஜினியரிங் படித்தால் வாழ்க்கையில் நூறு சதவீதம் வெற்றி பெறலாம். அதேநேரம், இன்ஜினியரிங் படித்த உடனேயே பன்னாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பில் அமர்ந்துவிட முடியாது. ஆரம்ப கட்டத்தில் ’டிரைனி’யாக வேலை பெற்றாலும், உங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, பணி உயர்வும், எதிர்பார்த்ததைவிட அதிக ஊதியமும் கிடைக்கும் வாய்ப்பு மிக பிரகாசம். அதற்காகவே, படிக்கும்போதே வேலைவாய்ப்பிற்கு தேவையான பயிற்சிகளை வழங்குகிறோம். 

இளநிலை பொறியியல் படிப்பில் சேர்ந்த அனைத்து மாணவர்களிடமும் படிப்பிற்கு பிறகான திட்டம் குறித்து கேட்கிறோம். உயர்கல்வி, தனியார் வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர்களது விருப்பத்தைப் பொறுத்து, உரிய பயிற்சி அளிக்கிறோம்.  

உயர்கல்வி அவர்களது விருப்பம் எனில், காமன் அட்மிஷன் டெஸ்ட், கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். அரசு வேலைவாய்ப்பு அவர்களது விருப்பம் எனில், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., போன்ற மத்திய, மாநில அரசு தேர்வாணையங்கள் நடத்தும் சிவில் சர்வீசஸ், குரூப் -1 உள்ளிட்ட பிரதான போட்டித் தேர்வுகளை திறம்பட எழுதுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் சிறந்த வேலை வாய்ப்பு அவர்களது விருப்பமாக இருப்பின், அவர்களது துறை சார்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டிலிருந்து நவீன தொழில்நுட்பத்திலும், வெளிநாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

முக்கிய பொறுப்பு

இவைதவிர, கல்வியிலும், விளையாட்டு துறைகளிலும் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குகிறோம். தேசிய அல்லது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கிறோம். மேலும், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு உதவித்தொகையும் வழங்குகிறோம். தரமான கல்வி மற்றும் சிறந்த பணி வாய்ப்பு ஆகியவற்றை அமைத்துக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை சமூகத்திற்கான சிறந்த குடிமகனாகவும் உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்தே, அதற்கேட்ப செயல்படுகிறோம்!

-இந்து முருகேசன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us