பேஷன் படிப்பிற்கு ‘நிப்ட்’ | Kalvimalar - News

பேஷன் படிப்பிற்கு ‘நிப்ட்’பிப்ரவரி 12,2019,11:54 IST

எழுத்தின் அளவு :

பேஷன் துறையான ஆடை வடிவமைப்பு கலையில், புதுமைகளை முன்னெடுக்கவும், வணிக ரீதியான வளர்ச்சி மற்றும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது ஆகிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டதே ‘நேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ (நிப்ட்).

அறிமுகம்:
மத்திய அரசின் ஜவுளி துறை அமைச்சகத்தால் 1986ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் நாட்டின் முதன்மையான ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமாகும். இங்கு வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சார் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் பல லட்சம் தொழிற்சார் வல்லுநர்களையும் இது உருவாக்கியுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பாட்னா என நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த கல்வி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மொரிஷியசில் பன்னாட்டு மையமொன்றும் இயங்கி வருகிறது.

துறைகள்:
 டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் டிசைன்
 டிபார்ட்மெண்ட் ஆப் டெக்ஸ்டைல் டிசைன்
 டிபார்ட்மெண்ட் ஆப் லெதர் டிசைன்
 டிபார்ட்மெண்ட் ஆப் நிட்வியர் டிசைன்
 டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் அண்ட் லைப்ஸ்டைல் ஆக்சிசரிஸ்
 டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் கம்யூனிகேஷன்
 டிபார்ட்மெண்ட் ஆப் டிசைன் ஸ்பேஸ்
 டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்
 டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் டெக்னாலஜி

படிப்புகள்:
 பி.டெஸ்., - 4 ஆண்டுகள்
 பி.எப்.டெக்., - 4 ஆண்டுகள்
 எம்.டெஸ்., - 2 ஆண்டுகள்
 எம்.எப்.எம்., - 2 ஆண்டுகள்
 எம்.எப்.டெக்., - 2 ஆண்டுகள்
 பிஎச்.டி.,

சேர்க்கை முறை:
நிப்ட் கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மூன்றடுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதலில் பி.டெஸ்., எனப்படும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.டெஸ்., எனும் முதுநிலை படிப்பில் சேர்க்கை பெற ‘கிரியேடிவ் எபிலிட்டி டெஸ்ட்’ (சி.ஏ.டி.,) தேர்வினையும் அதை தொடர்ந்து அடுத்த நிலையாக ‘ஜென்ரல் எபிலிட்டி டெஸ்ட்’ (ஜி.ஏ.டி.,) தேர்வினையும் எழுத வேண்டும். 

பி.எப்.டெக்., எம்.எப்.எம்., மற்றும் எம்.எப்.டெக்., ஆகிய படிப்புகளுக்கு ஜி.ஏ.டி., தேர்வினை மட்டும் எழுத வேண்டும். இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும்.

விபரங்களுக்கு: www.nift.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us