அறிவோம் ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., | Kalvimalar - News

அறிவோம் ஏ.சி.எஸ்.ஐ.ஆர்.,ஜனவரி 24,2019,11:48 IST

எழுத்தின் அளவு :

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளின் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு தலை சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான பயிற்சிகளையும், உயர் தரமான கல்வியையும் வழங்குவதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்ட கல்வி நிறுவனமே ‘அகாடமி ஆப் சயின்டிபிக் அண்ட் இனோவேடிவ் ரிசர்ச்’ (ஏ.சி.எஸ்.ஐ.ஆர்.,)!

அறிமுகம்:
அறிவியலில் புதுமையான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக 2010ம் ஆண்டு மத்திய அரசால் தனி சட்டம் இயற்றப்பட்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவப்பட்டது. மேம்பட்ட ஆராய்ச்சி படிப்பினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் (எச்.ஐ.ஆர்.ஓ.,) என்கிற அங்கீகாரமும் இந்திய அரசால் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் சிறந்த தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை நாடு அடையும் என்பதைக் கருத்தில் கொண்டே ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., இயங்கி வருகிறது.

நோக்கங்கள்:
* இயற்கை அறிவியல், உயிர் அறிவியல், கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவது.
* புதுமையான அறிவியல் சிந்தனைகளை வரவேற்பது.
* மதிப்பெண்கள் மற்றும் சதவீதங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு மாறாகத் தொழில்நுட்ப ரீதியான கற்றல் திறனை மேம்படுத்துவது.
* இந்தியா மற்றும் பிற நாட்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அறிவியல் தொழில்நுட்ப வசதிகளை உயர்த்துவது.
* துறை சார்ந்த பயிற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் முறைப்படுத்துவது.

படிப்புகள்:
* பிஎச்.டி., இன் இன்ஜினியரிங்
* இண்டக்ரேட்டட் டூயல் டிகிரி பிஎச்.டி., புரோகிராம் இன் இன்ஜினியரிங்
* பிஎச்.டி., இன் சயின்ஸ்
* எம்.டெக்.,
* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் நியூட்ரீஷனல் பயாலஜி
* எம்.எஸ்சி., இன் புட் டெக்னாலஜி
* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் கிளினிக்கல் ரிசர்ச்
* இண்டக்ரேட்டட் எம்.எஸ்சி., பிஎச்.டி., இன் ஹெல்த் இன்பர்மெடிக்ஸ்
* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா புரோகிராம்ஸ் (ரோபடிக்ஸ், மானுபாக்ச்சரிங் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் மெய்ன்டனன்ஸ்)

சேர்க்கை முறை:
ஆண்டிற்கு இரு முறை மாணவர்களின் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் இங்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஏ.சி.எஸ்.ஐ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

விபரங்களுக்கு: http://acsir.res.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us