இந்திய மறுவாழ்வு கழகம் | Kalvimalar - News

இந்திய மறுவாழ்வு கழகம்ஜனவரி 13,2019,11:14 IST

எழுத்தின் அளவு :

மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் சேவைகளை முறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அவர்களுக்கான பாடத்திட்டங்களை வடிவமைத்து தரநிலைப்படுத்துதல் போன்ற செயல்களின் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே ‘ரீஹாபிலிடேஷன் கவுன்சில் ஆப் இந்தியா’ எனும் இந்திய மறுவாழ்வு கழகம்.

அறிமுகம்:
மாற்றுத்திறனாளி, படிப்பில் பின்தங்கியோர் மற்றும் சிறப்பு கல்வி தேவைப்படும் மாணவர்களுக்கான அமைப்பாக 1992ம் ஆண்டு பாராளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட்டு ஜூன் 1993ம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக நிறுவப்பட்டது. பின்பு 2000ம் ஆண்டில் சில சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மேலும் மெருகேற்றப்பட்டது. குறைபாடுகளுடைய நபர்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன், அவர்களுக்கான சம வாய்ப்பினை வழங்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.

குறிக்கோள்கள்:
 குறைபாடுகள் உள்ள நபர்களின் மறுவாழ்விற்கான கொள்கை திட்டங்களை முறைப்படுத்துவது.
 மாற்றுத்திறனாளிகளை நிபுணர்களாக்குவதற்கான பயிற்சி தரமான பயிற்சி வகுப்புகளை வழங்குவது.
 பல்துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை இவர்களுக்கு வழங்குவது.
 நாட்டின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்த விதிகளை முறையாக பின்பற்ற செய்வது.
 மறுவாழ்வு வழங்கும் விதமாக இளநிலை, முதுநிலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை நாட்டின் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் தருவது.
 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குவது.
 மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்துதல்.

படிப்புகள்:
எம்.எட்., பி.எட்., போன்ற படிப்புகள் ஒவ்வொரு வகை குறைபாடுகளுக்குமென தனித்தனியே வழங்கப்படுகிறது.
 பார்வை குறைபாடு
 கேட்டல் குறைபாடு
 மனநலம் பாதிக்கப்பட்டோர்
 கற்றல் குறைபாடு
 மறுவாழ்வு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
 புரோஸ்தடிக்ஸ் அண்ட் ஆர்தடிக்ஸ்
 மறுவாழ்வு உளவியல்
 மருத்துவ உளவியல்
 பேச்சு மற்றும் கேட்டல்
 லோகோமாட்டர் மற்றும் பெருமூளை வாதம்
 ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் மற்றும் கோளாறு
 மறுவாழ்வு சிகிச்சை

மேலும், வழக்கமான படிப்புகளுடன் தொலைநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

விபரங்களுக்கு: www.rehabcouncil.nic.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us