இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் | Kalvimalar - News

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்டிசம்பர் 26,2018,23:22 IST

எழுத்தின் அளவு :

வேளாண்மையில் தற்போதுள்ள சவால்கள் மட்டுமின்றி வருங்காலத்தில் வரப்போகும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் பொருட்டு மத்திய வேளாண் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதே, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்.

அறிமுகம்:
வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், வேளாண்மைப் பல்கலைக்கழகங்களை முறைப்படுத்தவும் 1929ம் ஆண்டு இந்திய அரசால், இந்த ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தப்பட்டது. தோட்டக்கலை, மீன் வளம் மற்றும் விலங்கியல் சார்ந்த ஆராய்ச்சிகளும் வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் 90க்கும் அதிகமான நிறுவனங்களும், 45 வேளாண் கல்வி நிறுவனங்களும் நாடு
முழுவதிலும் செயற்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் மிகப்பெரிய வேளாண் அமைப்புகளில் இதுவும் ஒன்று.

உருவாக்கப்பட்ட நாள் முதல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பின் மூலம் நாட்டின் பசுமைப்புரட்சியிலும், விவசாய வளர்ச்சியிலும் பெரும்பங்கினை இந்த ஆராய்ச்சி கழகம் வகித்துள்ளது. உணவு தானியம், மீன், பால், முட்டை ஆகிய உற்பத்திகளைப் பல மடங்கு உயர்த்திப் பெறும் முன்னேற்றத்தை ஐ.சி.ஏ.ஆர்., ஏற்படுத்தி உள்ளது.

ஐ.சி.ஏ.ஆர்., அமைப்புகள்:
 4 தன்னாட்சி பல்கலைக்கழகங்கள்
 64 கல்வி நிறுவனங்கள்
 15 தேசிய ஆராய்ச்சி மையங்கள்
 6 தேசிய பணியகங்கள்

முக்கிய பிரிவுகள்:
 கிராப் சயின்ஸ்
 ஹார்டிகல்ச்சுரல் சயின்ஸ்
 நேச்சுரல் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட்
 அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங்
 அனிமல் சயின்ஸ்
 பிஷ்சரி சயின்ஸ்
 நேஷனல் அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ் பண்ட் (என்.ஏ.எஸ்.எப்.,)
 அட்மினிஸ்ட்ரேஷன்
 பினான்ஸ்

படிப்புகள்:
அக்ரிகல்ச்சுரல் கெமிக்கல்ஸ், அக்ரிகல்ச்சுரல் எக்னாமிக்ஸ், அக்ரிகல்ச்சுரல் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சுரல் எக்ஸ்டென்ஷன், அக்ரிகல்ச்சுரல் பிசிக்ஸ், அக்ரிகல்ச்சுரல் ஸ்டாடிஸ்டிக்ஸ், அக்ரோனமி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ இன்பர்மெடிக்ஸ், கம்பியூட்டர் அப்ளிகேஷன், எண்டமாலஜி, என்விரான்மெண்டல் சயின்சஸ், புட் சயின்ஸ் அண்ட் போஸ்ட் ஹார்வெஸ்ட் டெக்னாலஜி, ஜெனிடிக்ஸ் அண்ட் பிளாண்ட் பிரீடிங், ஹார்டிகல்ச்சர், புரூட் சயின்ஸ், வெஜிடபுல் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, மாலிகுலார் பயாலஜி அண்ட் பயோடெக்னாலஜி, பிளான்ட் ஜெனிடிக் ரிசோர்ஸ், பிளான்ட் பாத்தாலஜி, சீட் சயின்ஸ் டெக்னாலஜி, சாயில் சயின், வாட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை ஐ.சி.ஏ.ஆர்., கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

விபரங்களுக்கு: www.icar.org.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us