சேட் தேர்வு | Kalvimalar - News

சேட் தேர்வுடிசம்பர் 21,2018,15:27 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட அயல்நாடுகளில் இளநிலை பட்டப்படிப்பை பெற விரும்பும் மாணவர்கள், அப்படிப்பிற்குத் தகுதியானவர்களா என்பதை மதிப்பிடுவதற்காக நடத்தப்படும் பல தகுதி தேர்வுகளில் முக்கியமானது ‘ஸ்காலஸ்டிக் அசெஸ்மெண்ட் டெஸ்ட்’ (சாட்) எனும் மதிப்பீட்டுத் தேர்வு. மாணவர்கள், அவர்களது அறிவாற்றலை நிரூபிக்க உதவும் ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த தேர்வு கருதப்படுகிறது!

வரலாறு:
முன்னதாக பள்ளிக்கல்வி திறனறியும் தேர்வு (ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட்) என்கிற பெயரில் நடத்தப்பட்டு வந்த இந்த தேர்வு, தற்போது பள்ளிக்கல்வி மதிப்பீட்டுத் தேர்வு என்று மாற்றப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் முழு அங்கீகாரம் பெற்று தரநிலையாக்கப்பட்ட தேர்வு இது. கணிதம், வாசித்தல் மற்றும் எழுத்து தேர்வுகளின் மூலம் மாணவர்களது திறன் சோதிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள 1,700க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ’சேட்’ தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.

சேட் வகைகள்:
ஸ்காலஸ்டிக் அசெஸ்மெண்ட் டெஸ்ட் தேர்வானது, சேட் மற்றும் சேட் சப்ஜெக்ட் என இரு வகைகளில் நடத்தப்படுகிறது. இந்த இரண்டு தேர்வுகளையும் எழுதும் மாணவர்களுக்கு சேர்க்கையின் போது முன்னுரிமை வழங்கப்பட்டாலும், சேட் சப்ஜெக்ட் தேர்வை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

தகுதிகள்:
பள்ளிப்படிப்பை முடித்து வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியைப் பெற விரும்பும் மாணவர்கள் சேட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
சேட் தேர்வு, வாசித்தல், கணிதவியல் மற்றும் எழுதுதல் ஆகிய முதன்மை மூன்று பிரிவுகளில், மொத்தம் 1600 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.  சேட் சப்ஜெக்ட் தேர்வு, உலக வரலாறு, இலக்கியம், வேதியியல், இயற்பியல் உட்பட 20 பிரிவுகளில் நடத்தப்படுகிறது. சேட் தேர்வு 3 மணி 45 நிமிடங்களுக்கும், சேட் சப்ஜெக்ட் தேர்வு ஒரு மணி நேர கால அளவையும் கொண்டது. 

வாசித்தல் நுண்ணாய்வு பிரிவு - இந்த பிரிவில் வாக்கியத்தை நிறைவு செய்தல், பத்திகளைப் படித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தல் என மொத்தம் 52 கேள்விகள் கேட்கப்படும். சமூக அறிவியல், மனித நேயம், இயல் அறிவியல், தனிநபர் விரிவுரைகள் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

கணிதவியல் பிரிவு - மூன்று மதிப்பிடப்பட்ட பிரிவுகளைக் கொண்டது கணிதவியல் பிரிவு. குறியீடு, எண்ணிலக்க கேள்விகள், இயற்கணிதம் மற்றும் சிதறல் வரைபடங்கள் ஆகிய கேள்விகளை இந்த பிரிவு கொண்டுள்ளது.

எழுதுதல் பிரிவு - விருப்ப கேள்விகள், விரிவான கட்டுரை எழுதுதல் ஆகிய பகுதிகளை இந்த பிரிவு உள்ளடக்கியுள்ளது. சரியான விடையை தேர்ந்தெடுத்தல், பிழையை கண்டறிதல், வாக்கியத்தை மேம்படுத்துதல் ஆகிய வடிவில் கேள்விகள் அமைந்திருக்கும்.

தேர்வு காலம்: அக்டோபர், டிசம்பர், மார்ச் மற்றும் மே என ஆண்டிற்கு நான்கு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. காகித வழித் தேர்வாக மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பித்தல்:
இதற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் சேட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனிலும் அல்லது அஞ்சல் வழியிலும் செய்யலாம். பதிவின் போது தேர்வு மையம் குறித்த விபரங்கள் வழங்கப்படும். சென்னை உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விபரங்களுக்கு: https://collegereadiness.collegeboard.org/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us