ராஜிவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட் | Kalvimalar - News

ராஜிவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட்டிசம்பர் 13,2018,22:16 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காகவும் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனமே ‘ராஜிவ் காந்தி நேஷன்ல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மெண்ட்’.

அறிமுகம்:
பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக 1993ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் இந்த கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமா படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளும் இங்கு வழங்கப்படுகின்றன. விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடுவதோடு, அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளையும் இக்கல்வி நிறுவனம், நாடு முழுவதும் ஒருங்கிணைத்து வருகிறது. மேலும் நாட்டில் இளைஞர்களின் மேம்பாட்டிற்கான முக்கிய அமைப்பாகவும் இது செயல்பட்டு வருகிறது. என்.எஸ்.எஸ்., என்.வை.கே.எஸ்., போன்ற அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. நகரம், கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளிலும் இளைஞர்கள் பணியாற்ற ஊக்குவித்து வருகிறது.

பணிகள்:
* இளைஞர்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை திறம்பட பிரதிபலிப்பதன் மூலம் அவர்களுக்கான திட்டங்களை வகுத்தளிப்பது.
* நாட்டின் அனைத்து இளைஞர் மேம்பாட்டு நிறுவனங்களிலும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்காக நிதியுதவி வழங்குவது, பயிற்சி மற்றும் சிறப்பு ஆலோசனைகளைத் தருவது.
* இளைஞர்களுக்கான பிற தொடர்பு சேவைகள், நூலக வசதிகள் ஆகியவற்றை அமைத்து இளைஞர் அமைப்புகளை ஊக்குவிப்பது.
* ஆய்வுகளின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களின் வாழ்வியலைப் பாதிக்கும் பிரச்சனைகளைக் களைய முயற்சிப்பது.

குறிக்கோள்கள்:
* திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் இளைஞர்களைத் தேசிய வளர்ச்சியில் பங்கேற்க வைப்பது.
* இளைஞர் மேம்பாட்டிற்கான சிறந்த உயர் கல்வியை வழங்குவது.
* இளைஞர் அமைப்புகளின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து அவற்றின் மேம்பாட்டிற்கு முயற்சிப்பது.

படிப்புகள்:
எம்.எஸ்சி., -கவுன்சிலிங் சைக்காலஜி, 
எம்.ஏ., -டெவலப்மெண்ட் பாலிசி அண்ட் பிராக்டீஸ், 
எம்.ஏ., -ஜென்டர் ஸ்டடீஸ், 
எம்.ஏ., -லோக்கல் கவர்னன்ஸ் அண்ட் டெவலப்மெண்ட், 
எம்.ஏ., -சோசியல் இனோவேஷன்ஸ் அண்ட் ஆன்ட்ரபிரனர்ஷிப், 
எம்.ஏ., -சோசியல் வொர்க், 
பி.வொக், -அப்பேரல் மேனுபாக்சரிங் அண்ட் ஆன்ட்ரபிரனர்ஷிப், 
பி.வொக், -பேஷன் டிசைன் அண்ட் ரீடேய்ல், 
போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா இன் யூத் டெவலப்மெண்ட் அண்ட் பொலிடிக்கல் லீடர்ஷிப்.
மற்றும் பிஎச்.டி.,

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் அமைப்பதற்காக பல்வேறு முயற்சிகளின் மூலம் தரமான கல்வியைச் சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன், உதவித்தொகைகளையும் வழங்கி ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு: www.rgniyd.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us