‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு கண்கள்’! | Kalvimalar - News

‘அறிவும், ஒழுக்கமும் இரண்டு கண்கள்’!டிசம்பர் 04,2018,13:51 IST

எழுத்தின் அளவு :

பனியன் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் குழந்தைகள் கல்வி அறிவு பெற்று, வாழ்க்கையில் சிறந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக, 1991ம் ஆண்டில், திருப்பூரில், எனது முதல் பள்ளியை துவக்கினேன்!

பெற்றோர்களின் ஆதரவால் பள்ளி சிறப்பாக செயல்படவே, தரமான உள்கட்டமைப்பு வசதிகளை மாணவ, மாணவிகளுக்கு அளிக்க முடிந்தது. 2003ம் ஆண்டில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கல்வி அளிக்கும் திட்டத்தை இப்பகுதியில் முதல்முறையாக செயல்படுத்தினேன். பிறகு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கான தேவையை உணர்ந்து, சி.பி.எஸ்.இ., பள்ளியையும் ஆரம்பித்தேன்.

மாணவர்கள், தாங்கள் விரும்பும் உயர்கல்வியை கற்கவும், தரமான கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறவும் அதிக மதிப்பெண் பெறுவது அவசியமாகிறது. ஆகவே, அதிக மதிப்பெண் பெற தேவையான பயிற்சியை, ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் தொடர்ந்து வழங்கி வருகிறோம். பள்ளிக்கு தொடர் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று, அவர்களது பிரச்சனைகளை களைந்து மீண்டும் பள்ளிக்கு வர ஊக்குவிக்கிறோம்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து ஆசிரியர்களும் முனைப்புடன் செயல்படுவதால், நூறு சதவீத தேர்ச்சி மற்றும் சிறந்த மதிப்பெண் பெறும் பள்ளியாக செயல்பட முடிகிறது. பிளஸ் 1 பாடத்திட்டத்தை முழுவதுமாக படிக்கவும், மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ‘நீட்‘, சி.ஏ., ஐ.ஐ.டி.ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்துவதோடு, விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இவைதவிர, ‘ஸ்மார்ட்’ வகுப்பறை, தொடர்பியல் ஆய்வகம், கையெழுத்துப் பயிற்சி, யோகா, கராத்தே பயிற்சி,  போன்றவையும் மாணவர்களுக்கு வழங்குகிறோம். ஏழை, எளிய மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை மட்டுமின்றி, இலவச கல்வியும் அளிக்கிறோம்.

அதிக மதிப்பெண் பெற மட்டுமின்றி, மாணவ, மாணவிகள் எப்போதும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளவும் ஊக்குவிக்கிறோம். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அறிவும், ஒழுக்கமும் இரண்டு கண்கள் போன்றவை. எங்கள் கல்வி நிறுவனத்தில் அனைத்து மாணவ, மாணவிகளையும், தினமும் அவர்களது பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள வயதானவர்களின் காலில் விழுந்து வணங்கிவிட்டு, பள்ளிக்கு வர அறிவுறுத்துகிறோம். இதனால், மாணவர்களின் பண்பில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இன்றைய மாணவர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் அளித்து வேலை வழங்க பிரபல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நமது நாட்டைச் சேர்ந்த பலர் உலகளவில் சாதனை படைத்து வருகின்றனர். நமது நாட்டு மாணவர்களுக்கு சர்வதேச அளவில் போட்டியிடும் தகுதியும், திறமையும் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய தகுதி ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை, எங்களது மாணவர்களுக்கு உணர்த்துவதோடு மட்டுமல்லமால், அவற்றைக் வெளிக்கொணரவும் செய்கிறோம்! 

-ஆண்டவர் ஏ.ராமசாமி, தலைவர், விகாஸ் வித்யாலயா கல்வி நிறுவனங்கள், திருப்பூர்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us