அமெரிக்காவில் 10.94 லட்சம் சர்வதேச மாணவர்கள் | Kalvimalar - News

அமெரிக்காவில் 10.94 லட்சம் சர்வதேச மாணவர்கள்நவம்பர் 22,2018,16:15 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவின் வளர்ச்சியில் வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துவருகின்றனர். 2017-18ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா சென்ற ஒட்டு மொத்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 10,94,792. இதன்மூலம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில், வெளிநாட்டு மாணவர்களின் பங்களிப்பு 42 பில்லியன் அமெரிக்க டாலர்!

அமெரிக்காவில் உள்ள 4500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற (அமெரிக்க மாணவர்கள் உட்பட) மாணவர்களின் எண்ணிக்கை 1,98,31,000. இதன்படி, அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 5.5 சதவீதம் பேர்.

அமெரிக்காவில் கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2016-17ம் ஆண்டில் 1,86,267 ஆக இருந்த நிலையில், 2017-18ம் ஆண்டில் 1,96,271 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, முந்தைய ஆண்டைவிட 5.4 சதவீத இந்திய மாணவர்கள் கூடுதலாக சேர்க்கை பெற்றுள்ளனர். அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 3,63,341 மாணவர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

பெரும்பாலும், இன்ஜினியரிங், மேலாண்மை, சோசியல் சயின்ஸ், பிசிக்கல் அண்ட் லைப் சயின்சஸ், பைன் அண்ட் அப்ளைடு ஆர்ட்ஸ், ஹெல்த், இன்டன்சிவ் இங்கிலீஷ், கம்யூனிகேஷன்ஸ் அண்ட் ஜர்னலிசம், எஜுகேஷன், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்காக அதிகளவிலான மாணவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இளநிலை படிப்புகளை விட, முதுநிலை படிப்புகளுக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களே அதிகம்.

வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் தேர்வு செய்த அமெரிக்க கல்வி நிறுவனங்களின் பட்டியல்:

1. நியூயார்க் யுனிவர்சிட்டி - 17,552 வெளிநாட்டு மாணவர்கள்
2. யுனிவர்சிட்டி ஆப் சதர்ன் கலிபோர்னியா - 16,075
3. நார்த்ஈஸ்டர்ன் யுனிவர்சிட்டி (போஸ்டன்)- 14,905
4. கொலம்பியா யுனிவர்சிட்டி - 14,615
5. அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி - 13,459
6. யுனிவர்சிட்டி ஆப் இல்லினோசிஸ் - 13,445
7. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா (லாஸ் ஏஞ்செல்ஸ்)- 12,017
8. புர்டூ யுனிவர்சிட்டி - 11,044
9. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா ( சான் டியாகோ) - 9,883
10. போஸ்டன்  யுனிவர்சிட்டி - 9,742
11. யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் - 9,713
12. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா (பெர்கெலே) - 9,331
13. யுனிவர்சிட்டி ஆப் வாசிங்டன் - 8,902
14. பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டி - 8,636
15. கார்னெஜி மெல்லான் யுனிவர்சிட்டி - 8,604
16. யுனிவர்சிட்டி ஆப் மிச்சிகன் - 8,442
17. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா (இர்வைன்) - 7,902
18. மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி - 7,624
19. இன்டியானா யுனிவர்சிட்டி - 7,343
20. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா (டேவிஸ்) - 7,316

-ராபர்ட் பர்ஜெஸ், துணைத் தூதர், அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us