‘நீட்’ தேர்வு - 2019 | Kalvimalar - News

‘நீட்’ தேர்வு - 2019நவம்பர் 20,2018,12:50 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற கட்டாயம் எழுத வேண்டிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்’ எனப்படும் ‘நீட்’!

இதுவரை சி.பி.எஸ்.இ.,யால் நடத்தப்பட்டு வந்த ‘நீட்’ தேர்வு, இந்த ஆண்டு முதல் மத்திய மனிதவள துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்.டி.ஏ.,) அமைப்பால் நடத்தப்படவுள்ளது.

தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை முக்கிய பாடமாக தேர்ந்தெடுத்துப் படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., /எஸ்.டி.,/ ஓ.பி.சி., /பி.டபிள்யூ.டி., மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் 10 சதவீதம் வரை விலக்களிக்கப்படும்.

வயது வரம்பு:
17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டாராக இருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., / ஓ.பி.சி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் விலக்குண்டு.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை ‘நீட்’ தேர்விற்கான என்.டி.ஏ.,வின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும். தேர்வு எழுத விரும்பும் மொழி, தேர்வு மையம் போன்ற தகவல்களைக் குறிப்பிட்டு சுய விபரங்கள் மற்றும் தொடர்பு எண்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு எந்தத் தகவலையும் மாற்ற முடியாது என்பதை நினைவில் கொண்டு, மாணவர்கள் கவனமாக விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்வது நல்லது.

தேர்வு முறை:
தமிழ், இந்தி, ஆங்கிலம், அஸ்சாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மராத்தி, ஒடியா, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் இந்த தேர்வு நடைபெறும். எழுத்து வழித் தேர்வாக, 3 மணி நேரம் நடைபெறும்.

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் தலா 45 ‘மல்டிப்பிள் சாய்ஸ்’ கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு:  www.ntaneet.nic.in அல்லது www.nta.ac.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us