‘2030ல் கூடுதலாக 1,500 பல்கலைக்கழகங்கள் தேவை’ | Kalvimalar - News

‘2030ல் கூடுதலாக 1,500 பல்கலைக்கழகங்கள் தேவை’நவம்பர் 10,2018,17:01 IST

எழுத்தின் அளவு :

வரும் 2030ம் ஆண்டில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 14 கோடியை எட்டக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இத்தகைய கல்வித் தேவையை பூர்த்தி செய்ய இன்னும் கூடுதலாக, குறைந்தது 1,500 பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட வேண்டும் என்று யு.கே.-இந்தியா பிசினஸ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

தற்போது இந்தியாவில் உள்ள 736 பல்கலைக்கழகங்களில், 2.6 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். 21ம் நூற்றாண்டில் சர்வதேச அளவில், சிறந்த சக்தியாக இந்தியா வளம் வர, வேலை வாய்ப்பு திறன்களை மாணவர்கள் பெற்று விளங்குவதும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதும், உயர்கல்வி முறையை விரிவு படுத்தவேண்டியதும் அவசியமாகிறது.

சமூக மற்றும் பொருளதார சூழல்கள் சமநிலையில் நிலவ, இன்ஜினியர்கள், டேட்டா சயின்டிஸ்ட்ஸ், ஆசிரியர்கள், மருத்துவத்துறை வல்லுநர்கள், நகர வடிவமைப்பாளர்கள், கட்டடக்கலை வல்லுநர்கள், மேலாளர்கள், சமூக ஆர்வலர்கள், மருந்தாளுநர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் என அனைத்துத் துறையிலும் நிபுணர்கள் தேவை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us