இஸ்ரேல் ஸ்காலர்ஷிப் | Kalvimalar - News

இஸ்ரேல் ஸ்காலர்ஷிப்அக்டோபர் 23,2018,13:02 IST

எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்களுக்கு, ஆராய்ச்சி படிப்புகளுக்கான உதவித்தொகை திட்டம் ஒன்றை இஸ்ரேல் நாட்டின் உயர்கல்வி கழகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் கவர்ன்மெண்ட் ஸ்காலர்ஷிப் 2019-2020
இஸ்ரேல் நாட்டின் உயர்கல்வி துறையின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8 மாதங்களுக்கான ஆராய்ச்சி / நிபுணத்துவப் படிப்பு மற்றும் குறுகிய கால ஹீப்ரூ மொழி படிப்பு ஆகிய இரு வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

பாடப்பிரிவுகள்:
* கம்பேரிட்டிவ் ஸ்டடி ஆப் ரிலீஜியன்ஸ்
* மிடில் ஈஸ்ட் ஸ்டடீஸ்
* ஹீப்ரூ லாங்குவேஜ் அண்ட் லிட்ரேச்சர்
* ஹிஸ்ட்ரி ஆப் தி ஜூவிஷ் பீப்பிள்
* அக்ரிகல்ச்சர்
* பயாலஜி
* பயோடெக்னாலஜி
* எக்னாமிக்ஸ்
* பிசினஸ் மேனேஜ்மெண்ட்
* மாஸ் கம்யூனிகேஷன்
* என்விரான்மெண்டல் ஸ்டடீஸ்
* கெமிஸ்ட்ரி

தகுதிகள்: தாங்கள் விரும்பும் துறையில் இஸ்ரேல் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். வயது வரம்பு கிடையாது. ஆராய்ச்சி படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே மற்ற உதவித்தொகை திட்டங்களின் மூலம் வெளிநாடு சென்ற மாணவர்கள் குறைந்தது கடந்த இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ஆங்கிலம் அல்லது ஹீப்ரூ மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

உதவித்தொகை: பகுதி உதவித்தொகை மற்றும் முழு உதவித்தொகை என இரு முறைகளில் இந்த திட்டம் செயல்படுகிறது. பகுதி உதவித்தொகைக்கு தேர்வான மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியும், அடிப்படை மருத்துவக் காப்பீடும், எட்டு மாதங்களுக்கான மாத செலவிற்கான தொகையும் உதவித்தொகையாக வழங்கப்படும். முழு உதவித்தொகைக்கு தகுதிப்பெற்ற மாணவர்களுக்கு, முழு கல்வி கட்டணம், அடிப்படை மருத்துவக் காப்பீடு மற்றும் மாத செலவிற்கான தொகை வழங்கப்படும். விமான போக்குவரத்து, தங்கும் வசதி ஆகியவற்றை மாணவர்கள் தான் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: மத்திய மனிதவள துறை அமைச்சகத்தால் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூவர் வலைதளத்தின் மூலம் மட்டுமே மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியும்.

தேர்வு முறை: அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் சமீபத்திய கியூ.எஸ்., உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் இஸ்ரேல் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 30

விபரங்களுக்கு: http://proposal.sakshat.ac.in/scholarship/

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us