வானியல் படிப்பு | Kalvimalar - News

வானியல் படிப்புசெப்டம்பர் 29,2018,14:48 IST

எழுத்தின் அளவு :

பிரபஞ்ச அமைப்பு, கோள்களின் செயல்பாடு, அவற்றின் இயக்க திசை மற்றும் அண்டத்தின் தோற்றம் போன்றவை குறித்து விரிவாக கற்கும் வான் சார்ந்த படிப்பே வானியல். பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் கொண்ட இத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன! 

முக்கியத்துவம்:
வானியல் சாஸ்திரம் என்று அழைக்கப்பட்டு வந்த பிரபல துறையே, காலங்களுக்கு ஏற்றார் போல் மாறி இன்று தொழில்நுட்ப வளர்ச்சிகளுடன் இணைந்து வானியல் துறையாக உருவாகியிருக்கிறது என்று சொல்லலாம். ஆஸ்ட்ரோபிசிக்ஸ், ஆஸ்ட்ரோஜியாலஜி, ஆஸ்ட்ரோமீட்டராலஜி, ஆஸ்ட்ரோபயாலஜி, ஆஸ்ட்ரோமெட்ரி எனப் பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ள இத்துறை, ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு, இயற்பியலின் ஒரு உட்பிரிவாகவும் உள்ளது.  

படிப்புகள்: முதுநிலை, டிப்ளமா, எம்.பில்., பிஎச்.டி., மற்றும் சான்றிதழ் படிப்புகள்

தகுதி: பள்ளி படிப்பு முடித்தவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, முதுநிலை பட்டப்படிப்பாக வானியல் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். அதன் பிறகு தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் பெறலாம்.  

சிறப்பு பாடங்கள்:
சோலார் சிஸ்டம், கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ், ஸ்டெல்லர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் செலஸ்டியல் மெக்கானிக்ஸ்.  

தேவைப்படும் திறன்:
பிரபஞ்ச அமைப்பைப் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் ஆர்வம்.
புதிய தொழில்நுட்பங்களை கையாளும் திறன்.
வானியல் சார்ந்த பொய்யான நம்பிக்கைகளை உடைப்பது மற்றும் உண்மைகளை நிரூபிக்கும் ஆற்றல்.  

வேலைவாய்ப்புகள்:
வானியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய வானியல் ஆய்வு மையம் மற்றும் இஸ்ரோ போன்ற அரசு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தனியார் ஆராய்ச்சி மையங்களில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல், மத்திய அரசின் நியூக்ளியர் சயின்ஸ் மற்றும் கணிதத் துறை சார்ந்த மையங்களில் அரசு வேலை வாய்ப்பை பெறலாம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இத்துறை வல்லுநர்களுக்கு பணி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. கோளரங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் வேலை வாய்ப்பினை பெறலாம்.  

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
ஐ.ஐ.டி.,- மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி, கான்பூர், காரக்பூர்.
ஐ.ஐ.எஸ்.சி., - பெங்களூரு
இந்தியன் சென்டர் பார் ஸ்பேஸ் பிசிக்ஸ் - கொல்கத்தா
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ச் - மும்பை
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் - பெங்களூரு

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us