‘கேட்’ தேர்வு | Kalvimalar - News

‘கேட்’ தேர்வுசெப்டம்பர் 21,2018,10:50 IST

எழுத்தின் அளவு :

மத்திய மனிதவள துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) உட்பட நாட்டின் முன்னணி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வே, ‘கேட்’ எனப்படும் ‘கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்’!

முக்கியத்துவம்
எம்.இ., மற்றும் எம்.டெக்., படிப்புகளுக்கான தகுதி தேர்வாக மட்டுமே மாணவர்கள், இத்தேர்வை கருதக்கூடாது. ஏனெனில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு நிறுவனங்களுக்கு இணையாக கருதப்படும், ‘பி.எஸ்.யு.,’ எனப்படும் ‘பப்ளிக் செக்டார் அன்டர்டேக்கிங்’ நிறுவனங்களில் குரூப் - ஏ பிரிவு பணிகளில் சேர நேரடி தகுதியினை பெறுவர்.

தகுதிகள்
பொறியியல், தொழில்நுட்பம் அல்லது கட்டுமான துறைகளில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அறிவியல், கணிதம், புள்ளியியல் அல்லது கணினி துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வினை எழுதலாம். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். ‘கேட் 2019’ தேர்விற்கான அதிகாரப்பூர்வ இணைதளம் வயிலாக மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

தேர்வு முறை
மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, 65 கேள்விகள், மூன்று பிரிவுகளாக கேட்கப்படும். அதாவது பொதுத் தகுதி (ஜென்ரல் ஆப்டிடியூட்), பொறியியல் கணிதம் (இன்ஜினியரிங் மேத்மெட்டிக்ஸ்) மற்றும் துறை சார்ந்த பிரிவில் கேள்விகள் இருக்கும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செல்லும். கணினி வழி தேர்வாக மட்டுமே இத்தேர்வு நடைபெறும். ‘மல்ட்டிப்பிள் சாயிஸ்’ கேள்விகள் மற்றும் ‘நியூமரிக்கல் டைப்’ கேள்விகள் கேட்கப்படும். ‘மல்ட்டிப்பில் சாயிஸ்’ கேள்விகளில் மட்டும் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தேர்வு மையங்கள்
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களால், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கௌகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்க் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

விபரங்களுக்கு: http://gate.iitm.ac.in

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us