தடய அறிவியல் | Kalvimalar - News

தடய அறிவியல்செப்டம்பர் 15,2018,11:44 IST

எழுத்தின் அளவு :

மிகவும் சுவாரசியமான, அதேநேரம் சவால்கள் நிறைந்த, அறிவியல் சார்ந்த துறை ‘தடயவியல்’. சுருக்கமாக, அறிவியல் மற்றும் குற்றவியல் நீதி இணைந்த ஒரு துறை என்றும் சொல்லலாம்!

முக்கியத்துவம்:
வேதியியல், உயிரியல், உளவியல், சமூக அறிவியல், பொறியியல் போன்ற பல துறைகளின் துணை கொண்டு, அறிவியல் ரீதியாக குற்ற விசாரணை மற்றும் சட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண உறுதுணை புரிகிறது, தடய அறிவியல். இத்துறை வல்லுநர்களே ‘தடயவியலாளர்’ மற்றும் ‘பாரின்சிக் சயின்டிஸ்ட்’ என அழைக்கப்படுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாகவும், தடயவியல் துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதால் முன்பைவிட, துல்லியமாகவும், துரிதமாகவும் இத்துறை செயல்படுகிறது.

படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை, எம்.பில்., பி.எச்டி., டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள். பொதுவாக, இத்துறை சார்ந்து கிரிமினாலஜி, பாரின்சிக் சயின்ஸ், சைபர் பாரின்சிக் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பு பிரிவுகள்:
பாரன்சிக் பேத்தாலஜி, பார்ன்சிக் ஆந்த்ரபாலஜி, பார்ன்சிக் இன்ஜினியரிங், பாரன்சிக் ஜியாலஜி, பாரன்சிக் கெமிஸ்ட்ரி, டாக்ஸிக்காலஜி, சைக்காலஜி, கிளினிக்கல் பாரன்சிக் மெடிசன்.

தேவைப்படும் தகுதிகள்:
அறிவியல் அறிவு, பிரச்னைக்கான காரணத்தைப் பல விதங்களில் வித்தியாசமாக சிந்திக்கும் அறிவாற்றல், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திடமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கும் திறன் மற்றும் துல்லியமாக தீர்வுகளைக் கணிக்கும் ஆற்றல்.

வேலை வாய்ப்புகள்:
இந்த துறை பட்டதாரிகளுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புலனாய்வு துறை, காவல் துறை, ராணுவம் போன்ற தேசியப் பாதுகாப்பு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தனியார் துப்பறிவு நிறுவனங்களிலும் பணியில் சேரலாம். பாரன்சிக் போட்டோகிராபர், கிரைம் ரிப்போர்ட்டர், கிரைம் இன்வெஸ்டிகேட்டர் போன்ற பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஆராய்ச்சியாளராகவும், கல்லூரிகளில் பேராசிரியாகவும் செயல்படலாம். சுயமாக தொழில் செய்யவும் வாய்ப்பு உண்டு.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
* லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் இன்ஸ்டிடியூட் ஆப் கிரிமினாலஜி அண்ட் பாரன்சிக் சயின்ஸ், டில்லி
* டாக்டர் ஹரிசிங் கவுர் விஸ்வ வித்யாலயா, மத்தியப் பிரதேஷ்
* குஜராத் பாரன்சிக் சயின்ஸ் யூனிவர்சிட்டி, குஜராத்
* யூனிவர்சிட்டி ஆப் டெல்லி, புதுடில்லி
* மெட்ராஸ் யூனிவர்சிட்டி, சென்னை

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us