பார்மசி படிப்பு | Kalvimalar - News

பார்மசி படிப்புசெப்டம்பர் 07,2018,12:39 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில், துணை மருத்துவப் படிப்புகளில் மிகவும் பிரபலமான ஒன்று ‘பார்மசி’. பலதரப்பட்ட நோய்களுக்கான மருந்துகளை தயாரித்தல் மற்றும் விநியோகித்தலில் உள்ள அறிவியல் மற்றும் நுணுக்கங்களை முறையாக கற்றுத்தேர்பவர், ‘பார்மசிஸ்ட்’. மருந்துகளின் நம்பகத் தன்மை மற்றும் அதன் ஆற்றல் திறனை அறிவதும் ஒரு ’பார்மசிஸ்ட்’டின் முக்கிய பணி!

முக்கியத்துவம்
அறிவியலின் ‘ஹெல்த் சயின்ஸ்’ பிரிவும், ‘கெமிக்கல் சயின்ஸ்’ பிரிவும் ஒன்றிணைந்ததே,  பார்மசி துறை. சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்து, மாத்திரைகளின் வேதியியல் அமைப்புகள், பக்க விளைவுகள், ஆற்றல் திறன் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றைக் கணக்கிட இந்த துறையில் கற்றுத்தரப்படுகிறது. மருத்துவத் துறை வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில், பார்மசி துறையும் பல கிளை பிரிவுகளை உள்ளடக்கி, இயங்கி வருகிறது.

படிப்புகள்
பி.பார்ம்., -பி.டெக்.(பார்ம்) -எம்.பார்ம்., எம்.டெக்.(பார்ம்) -எம்.எஸ்.(பார்ம்), -பிஎச்.டி., மற்றும் டிப்ளமா படிப்புகள்.

தகுதிகள்
இளநிலை படிப்பில் சேர, 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தவராக இருத்தல் அவசியம். அதேபோல், முதுநிலை பட்டத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்த இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறப்பு பிரிவுகள்
கார்டியோவாஸ்குலார் பார்மசி, இன்பக்ட்சியஸ் டிசீஸ் பார்மசி, ஆன்காலஜி பார்மசி, நியூக்லியர் பார்மசி, நியூட்ரீஷியன் பார்மசி மற்றும் சைக்கியாட்ரி பார்மசி.

முக்கிய பாடங்கள்
ஹுயுமன் அனாடமி அண்ட் பிசியாலஜி, பார்மசூட்டிக்கல் மாக்ஸ் அண்ட் பயோ ஸ்டேடிஸ்டிக்ஸ், பயோ கெமிஸ்ட்ரி மற்றும் பார்மசூட்டிக்கல் பயோடெக்னாலஜி.

வேலை வாய்ப்புகள்
இந்த துறை பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் குவிந்துள்ளன. ஆராய்ச்சி மையங்கள், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் தர பரிசோதனை நிலையங்கள் ஆகியவற்றிலும் வேலை பெறலாம். இதன்மூலம், டிரக்இன்ஸ்பெக்டர், அனலிட்டிக்கல் கெமிஸ்ட், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் போன்ற பொறுப்புகளை பெறலாம். முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும்பட்சத்தில், கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகவும் பணிபுரியலாம். பார்மசி கடைகள் அமைத்து, சுய தொழில் செய்யவும் வாய்ப்புகள் பிரகாசம்.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பார்மசூட்டிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச் -ஐதராபாத் மற்றும் மொகாலி
* தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மெடிக்கல் யுனிவர்சிட்டி- சென்னை
* இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி - மும்பை
* பஞ்சாப் யூனிவர்சிட்டி - சண்டிகர்
* ஐ.ஐ.டி., -வாரணாசி

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us