ரேடியோதெரபி | Kalvimalar - News

ரேடியோதெரபி செப்டம்பர் 04,2018,14:00 IST

எழுத்தின் அளவு :

மருத்துவத்துறை என்பது எம்.பி.பி.எஸ்., -– எம்.எஸ்., – எம்.டி., படித்த மருத்துவர்களை மட்டும் கொண்டு இயங்குவது அல்ல. எந்த ஒரு நோய்க்கும் சரியான சிகிச்சை வழங்குவதில், பல்துறை சார்ந்த துணை மருத்துவர்களின் பங்களிப்பும் அதிகம் உள்ளது. இந்தவகையில், மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த ஒரு துணை மருத்துவ படிப்பே...ரேடியோதெரபி.

முக்கியத்துவம்
இன்றைய காலகட்டத்தில் பரவலாக காணப்படும் புற்றுநோய்க்கான சிகிச்சையில், திட்டமிடுதல் துவங்கி, சிகிச்சையின் ஒவ்வொரு படிநிலையிலும் மருத்துவருக்கு இணையான பங்களிப்பை வழங்குபவர் ’ரேடியோதெரபிஸ்ட்’. புற்றுநோய் மட்டுமல்லாது, மூளை மற்றும் தண்டுவடம் தொடர்பான மற்ற நோய்களுக்கான ரேடியேஷன் சிகிச்சையிலும் ’ரேடியோதெரபிஸ்ட்’களின் பணி அளப்பரியது.

படிப்புகள்: ரேடியோதெரபி துணை மருத்துவ படிப்புகளில் ஒன்று என்பதால், இதை படிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில் உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவராக இருக்க வேண்டும். பள்ளிப் படிப்பிற்கு பின் நேரடியாக பி.எஸ்சி.,- ரேடியோதெரபி படிக்கலாம். எம்.பி.பி.எஸ்., முடித்திருந்தால், எம்.டி.,- ரேடியோலஜி படித்து கதிரியக்க சிகிச்சை உள்ளிட்டவற்றிலும் பங்கு பெறலாம்.

முக்கிய பிரிவுகள்: இப்படிப்பானது ரேடியோகிராபி, ரேடியோ டயக்னாசிஸ், ரேடியோ அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ பயாலஜி மற்றும் நியூடோ இமேஜிங் அண்ட் இண்டர்வென்ஷனல் ரேடியோலஜி என, பல உட்பிரிவுகளைக் கொண்டது.

தேவைப்படும் திறன்கள்:
நவீன தொழில்நுட்பங்களை கையாளும் திறன், பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் செயல்படும் ஆற்றல் மற்றும் சோதனை முடிவுகளை சரியாக பகுப்பாயும் திறன்.

வேலைவாய்ப்புகள்:
நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே வரும் துறைகளுள் ஒன்று ரேடியோதெரபி. இத்துறையில் பட்டம் பெற்றவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியில் சேரலாம். அறுவை சிகிச்சை அறை முதல் ஐ.சி.யு.,– சி.சி.யு., பிரிவுகளிலும் பணி புரியலாம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பணி வாய்ப்புகள் அதிகம் உண்டு.

முக்கிய கல்வி நிறுவனங்கள்
* எய்ம்ஸ், புது டில்லி
* ஜிப்மர், புதுச்சேரி
* போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் காலேஜ் ஆப் நர்சிங், சண்டிகர்
* அப்பல்லோ இன்ஸடிடியூட் ஆப் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் அண்ட் அலைடு சயின்சஸ், சென்னை
* டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல், பெங்களூரு.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us