இனி ஆண்டிற்கு 2 முறை ஜே.இ.இ., தேர்வு! | Kalvimalar - News

இனி ஆண்டிற்கு 2 முறை ஜே.இ.இ., தேர்வு!செப்டம்பர் 03,2018,10:13 IST

எழுத்தின் அளவு :

என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உட்பட பல அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், இளநிலை இன்ஜினியரிங் மற்றும் ஆர்கிடெக்சர் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜே.இ.இ., மெயின் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (என்.டி.ஏ.,) ஜே.இ.இ., மெயின் 2019 தேர்வை நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்குகிறது. அது மட்டுமின்றி இந்த ஆண்டு சில முக்கிய மாற்றங்களைத் தேர்வு குழு செய்துள்ளது.

முதலாவதாக இனி இந்த தேர்வு ஆண்டிற்கு இருமுறை நடைபெறும். ஜனவரி 6 முதல் 20ம் தேதி வரை ஜனவரி மாதத்திற்கான அமர்வும், ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை ஏப்ரல் மாதத்திற்கான அமர்வும் நடத்தப்படவுள்ளது.

அடுத்தபடியாக இனி இது முழுக்க முழுக்க கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறவிருக்கிறது. எட்டு அமர்வுகளாகத் தேர்வு நடைபெறும் மாணவர்கள் தங்களுக்கு பொருந்தும் அமர்வை விண்ணப்பப் பதிவின் போதே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

12ம் வகுப்புத் தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தகுதியினை பெறுவார்கள்.

இந்த தேர்விற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் இணையம் வழியாகவே சமர்ப்பிக்க முடியும். ஜனவரி அமர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30. அதற்குள் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் மாணவர்களின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

அதேநேரம், மாணவர்கள் ஓர் ஆண்டின் இரண்டு அமர்வுகளிலும் தேர்வினை எழுதலாம். அதிக மதிப்பெண் பெற்ற தேர்வே சேர்க்கையின் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஜே.இ.இ., மெயின் 2019ம் ஜனவரி மாதத்திற்கான தேர்வு  முடிவுகள் ஜனவரி 31 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us