‘ஆராய்ச்சியே ஆணிவேர்’ | Kalvimalar - News

‘ஆராய்ச்சியே ஆணிவேர்’செப்டம்பர் 01,2018,16:53 IST

எழுத்தின் அளவு :

நாட்டில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்தட்டு மாணவர்களும், சிறப்பான கல்வி பெறும் நோக்கில், 1986ல் திருமதி.கண்ணம்மாள்
அறக்கட்டளையை நிறுவினார், ஏ.சி.சண்முகம்!

இந்த அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டுவந்த, டாக்டா எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரிகள், தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது.

இக்கல்வி நிறுவனத்திற்கு ’நாக் ஏ’ சான்றும், கல்வி நிறுவனத்தீன்கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மேலாண்மை ஆகிய 5 துறைகளுக்கு என்.பி.ஏ., தரச்சான்றும் கிடைத்துள்ளது.

ஒரு கல்வி நிறுவனம் சிறந்து விளங்குகிறது என்பதற்கு அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளே ஆதாராமாக திகழ்கின்றன. ஏனெனில், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் அக்கல்வி நிறுவனம், நாட்டின் வளர்ச்சிக்கும் துணை நிற்கிறது.

அந்தவகையில், எங்கள் கல்வி நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மையங்கள், முன்னணி தொழில் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் கூட்டுமைப்புடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இவை, மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறவும், படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பு பெறவும் உதவியாக அமைகின்றன.

இதுநாள்வரை, நமது இந்திய ராணுவம், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தியே, குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச வாகனங்களுக்கான உதரி பாகங்களை தயாரித்து வந்துள்ளன. இவ்வாறு இறக்குமதி செய்யாமல், உள்நாட்டிலேயே குண்டு துளைக்காத மூலக்கூறு பொருள்களை உருவாக்க, இந்திய ராணுவத்துறையின் நிதியுதவியுடன், எங்கள் கல்வி நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய அரசு பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,), ‘ராக்கெட் மோட்டாருக்கான உட்புற வடிவமைப்பு திட்டம்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை, எங்கள் கல்வி நிறுவனத்திற்கு அளித்துள்ளது. இந்த ஆராய்ச்சி, நமது நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது, இங்கே குறிப்பிடத்தக்கது.

குறுகிய ஆராய்ச்சி திட்டத்தில், கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கான ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை மட்டுமின்றி, நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் பல ஆராய்ச்சிகள் தேர்வுநிலையில் உள்ளன. அவைகளும் வெகுவிரைவில் இந்திய அரசின் நிதியுதவி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது!

 - ஏ.சி.எஸ். அருண்குமார், தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதுரவாயல், சென்னை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us