‘எனர்ஜி இன்ஜினியரிங்’ | Kalvimalar - News

‘எனர்ஜி இன்ஜினியரிங்’ ஆகஸ்ட் 30,2018,17:31 IST

எழுத்தின் அளவு :

ஆற்றல், தொழிற்சாலை பொறியியல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பொறியியல் படிப்பே, ‘எனர்ஜி இன்ஜினியரிங்’!

முக்கியத்துவம்
ஆற்றல் திறன், எரிசக்தி செயல்பாடு, தொழிற்சாலைகளுக்கு ஏற்றார் போல் திறம்பட ஆற்றலை பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து கற்பிக்கப்படும் இப்படிப்பில், கெமிக்கல், மெக்கானிக்கல் மற்றும் எலக்டிரிக்கல் ஆகிய மூன்று பொறியியல் துறைகளும் உள்ளடங்கியுள்ளன. புதுப்புது ஆற்றல் கருவிகளை உருவாக்குதல், குறைந்த ஆற்றலில் அதிக செயல் திறன் கொண்ட கருவிகளை வடிவமைத்தல், புதுப்பிக்க முடியாத ஆற்றல் பயன்பாட்டை குறைத்தல் போன்றவற்றை மேற்கொள்வதே ஒரு எனர்ஜி இன்ஜினியரின் பிரதான பணிகள்.

படிப்புகள்
பி.டெக்., பி.டெக்.எம்.டெக்.,-(ஒருங்கிணைந்த படிப்பு), எம்.இ., எம்.டெக்., பி.எச்டி.,

தகுதிகள்
இளநிலை படிப்பில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பிரிவை தேர்வு செய்திருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

சிறப்பு பிரிவுகள்
பவர் இன்ஜினியரிங், நியூக்லியர் எனர்ஜி, விண்ட் எனர்ஜி, ஹைட்ரோ எனர்ஜி, சோலார் எனர்ஜி.

முக்கிய பாடங்கள்
ரீனுவபில் எனர்ஜி டெக்னாலஜிஸ், தெர்மல் இன்ஜினியரிங் சிஸ்டம், எலக்ட்ரொ மெக்கானிக்கல் எனர்ஜி கன்வர்ஷன் மற்றும் எனர்ஜி கன்சர்வேஷன், ஆடிட் அண்ட் மேனேஜ்மெண்ட்.

தேவைப்படும் திறன்கள்
லாஜிக்கல் மற்றும் அனலிட்டிக்கல் திறன் பெற்றிருப்பது அவசியம். நாள்தோறும் வளர்ந்து வரும் புதுப்புது தொழில்நுட்பங்கள் குறித்த அறிவாற்றல் தேவை. மேலும், வித்தியாசமாக சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் திறன் பெற்றிருப்பது கூடுதல் பலம்.

வேலை வாய்ப்புகள்
அதிகரித்துவரும் எரிபொருள் மற்றும் எனர்ஜி குறைபாடுகளுக்கு நிகரான மாற்று சக்திகளை கண்டறிவதோடு, தற்போது பயன்பாட்டில் உள்ள ஆற்றல்களை முறையாக கையாள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்கு எனர்ஜி இன்ஜினியர்களின் தேவை மிக அவசியமான ஒன்று. எனவே, இத்துறை பட்டதாரிகளுக்கு அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி மையங்களில் பணி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆய்வுக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், ஆலோசனை மையங்கள் போன்ற இடங்களில் எனர்ஜி எபிஷியன்சி இன்ஜினியர், மாடலிங் இன்ஜினியர் ஆகிய பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும், இத்துறை சார்ந்தவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் பிரகாசம்.

பிரதான கல்வி நிறுவனங்கள்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காரக்பூர்
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி- சென்னை
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - குருக்ஷேத்ரா
* யூனிவர்சிட்டி ஆப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் - உத்தரகாண்ட்
* அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us