‘நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறோம்’ | Kalvimalar - News

‘நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறோம்’ஆகஸ்ட் 22,2018,11:04 IST

எழுத்தின் அளவு :

சென்னை அருகே உள்ள படூர், ஒரு வளர்ச்சி அடையாத கிரமமாக இருந்த காலகட்டத்தில், 23 ஆண்டுகளுக்கு முன், அங்கு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டது. கல்லூரி துவக்கப்பட்ட பின், மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்த அந்தப்பகுதி, தற்போது ஐ.டி., நெடுஞ்சாலையாக உருவெடுத்துள்ளது!

கல்லூரி வளாகத்திலேயே விடுதி, உணவு வசதி, கல்லூரிக்கு செல்ல சிறந்த சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதி என அனைத்து வசதிகளும் உள்ளன. கல்லூரி வளாகத்தில் ‘ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மெண்ட்’ திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. 2 ஏக்கரில் ஆர்கானிக் தோட்டமும் உள்ளது. ’பயோவேஸ்ட்’ முறையால், உணவு கழிவுகள் மூலம் எல்.பி.ஜி., கேஸ் தயாரிக்கப்பட்டு, அவை சமையலறைக்கு பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இவ்வாறு, கல்லூரியில் சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீடுகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

எங்கள் கல்லூரியில் படிக்கும், பி.காம்., மாணவர்களுக்கு ‘டேலி’, பயோடெக்னாலஜி மாணவர்களுக்கு ‘காளான் உற்பத்தி’, மைக்ரோ பயாலஜி மாணவர்களுக்கு ‘கழிவுகள் மறுசுழற்சி முறை’ என பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, துறை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு மாணவரும், தீய பழக்கங்களுக்கு ஆளாகமலிருக்க நன்னெறி வகுப்பும் நடத்தப்படுகிறது.

பள்ளி படிப்பிலிருந்து கல்லூரி, ஆராய்ச்சி என்று ஒவ்வொரு நிலையிலும், மாணவர்களின் அறிவாற்றல் மேம்பட, மொழி ஒரு இடையூறாக அமையாத வகையில், ஆங்கில பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது போன்ற பயிற்சிகளை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள மாணவர்களை ஊக்குவிக்கிறோம்.

அனைத்து சமூகப் பணிகளிலும் பங்கெடுக்க என்.எஸ்.எஸ்., மாணவர்களை ஊக்குவிக்கிறோம். இவைதவிர, விளையாட்டு போட்டிகள், கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சியில் போன்றவற்றில் ஈடுபடவும் அறிவுறுத்துகிறோம். கல்வியில் சிறந்த மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்குகிறோம்.

‘வேலையில்லா இளைஞர்களுக்கு எவ்வளவு நிதி உதவி அளித்தாலும், அது சில நாட்களுக்குத்தான் பயன்படும். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி அறிவு, அவர்களது வாழ்க்கை முழுவதும் பயன்படும்’ என்பதை உணர்ந்து, இந்துஸ்தான் சமுதாய கல்லூரியின் வாயிலாக முறையாக பள்ளிக் கல்வி பெறாத இளைஞர்களை நல்வழிப்படுத்த, வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கிறோம்.

குறிப்பாக, அழகுக்கலை, தையல், டேட்டா என்ட்ரி, டீ.டி.பி., உள்ளிட்ட ஏராளமான திறன் வளர்ப்பு பயிற்சிகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இவை தவிர, கல்லூரிக்கு அருகே உள்ள சுற்றுப்புற பள்ளி மாணவர்களுக்கும் நேரடி கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, ஒரு கல்வி நிறுவனம் எவ்வாறு மாணவரது வளர்ச்சியில் மட்டுமின்றி, சமுதாய மற்றும் நாட்டின் வளர்ச்சியிலும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணமாக எங்களது கல்லூரி திகழ்கிறது! 

-டாக்டர். சூசன் மார்த்தாண்டன், இயக்குநர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us