‘ஆக்குபேஷனல் தெரபி’ | Kalvimalar - News

‘ஆக்குபேஷனல் தெரபி’ஆகஸ்ட் 11,2018,10:43 IST

எழுத்தின் அளவு :

வயோதிகம், உடல்நலக்குறைவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை சிறப்பு சிகிச்சை மற்றும் பயிற்சியின் மூலம் நலமடையச் செய்யும், துணை மருத்துவமே ‘ஆக்குபேஷனல் தெரபி’!

முக்கியத்துவம்:
உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மனநலம் மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் நோயாளிகளைக் காப்பாற்றி, நம்பிக்கையுடன் வாழ ஊக்குவிப்பதே, ஆக்குபேஷனல் தெரபிஸ்டின் முக்கிய பணி. ஏராளமான துணை மருத்துவ படிப்புகள் இருந்தாலும், பொறுப்பும், சவால்களும் அதிகம் நிறைந்த ஒரு மருத்துவ பிரிவு இது.

உதாரணமாக, மனதளவில் பாதிக்கப்பட்டவர் என்றால் அவர்களது பேச்சு திறனை மேம்படுத்தவும்; ஊடல் ரீதியாக கை, கால்களை இழந்தவர்கள் என்றால், செயற்கையாக பொருத்தப்பட்ட உடல் பாகங்களுடன் வாழப் பழக இத்துறை வல்லுநர்கள் உதவுகிறார்கள்.

படிப்புகள்:
இளநிலை, முதுநிலை, எம்.பில்., பி.எச்டி., டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன.

சிறப்பு பிரிவுகள்:
அடல்ட் ரீஹாபிலேஷன், பீடியாட்ரிக்ஸ், ஹேண்ட் தெரபி, விஷன் ரீஹாபிலேஷன், அசிஸ்டட் லிவ்விங் மற்றும் சைக்கியாட்ரிக்

தேவைப்படும் திறன்கள்:
பாதிக்கப்பட்டவர்களை சரியான முறையில் பக்குவமாக கையாளும் திறன், நோயாளிகளை மன ரீதியாக ஊக்குவிக்கும் ஆற்றல் மற்றும் துரிதமாக செயல்படும் திறன்.

வேலை வாய்ப்புகள்:
ஆர்த்தோபீடிக், நீயூரோலாஜிக்கல் மற்றும் சைக்கலாஜிக்கல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்டின் துணை அவசியமாகத் தேவைப்படுகிறது. இந்த துறையில் பட்டம் பெற்றவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்றலாம் அல்லது தனியாக மருத்துவமனை அமைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. ஆலோசகராக, பேராசிரியராக, ஓ.டி.,சேவிலியராகவும் பணிபுரியலாம்.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:
* ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்கல் மெடிசன் அண்ட் ரீஹாபிலிடேஷன், மும்பை
* சக்ரதாரா இன்ஸ்டிடியூட் ஆப் ரீஹாபிலிடேஷன் சயின்ஸ், ஒரிசா
* மணிப்பால் காலேஜ் ஆப் ஆலிட் ஹெல்த் சயின்ஸ், கர்நாடகா
* கே.எம்.சி.எச்., காலேஜ் ஆப் ஆக்குபேஷனல் தெரபி, கோவை
* நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் தி லொகொமோட்டார் டிசெபிலிட்டீஸ், கொல்கத்தா

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us