புவியியல் படிப்புகள் | Kalvimalar - News

புவியியல் படிப்புகள்ஆகஸ்ட் 09,2018,12:38 IST

எழுத்தின் அளவு :

நாம் வாழும் இந்த பூமி உருவான வரலாறு தொடங்கி அதனுள் புதைந்துள்ள கனிம வளங்கள் உட்பட, புவி வெப்பமயமாதல் போன்ற எதிர்கால பிரச்சனைகள் வரையிலான புவி சார்ந்த அறிவியல் படிப்பே, புவியியல்!

முக்கியத்துவம்:
பூமியின் இயற்பியல் அமைப்பு, பருவ நிலைகள், மண் வலம், நீர் நிலைகள், கனிம இருப்புகள், காடு மற்றும் காட்டு வாழ் உயிரினங்கள் என அனைத்தையும் பற்றிய ஆர்வத்தைத் தூண்டக்கூடிய படிப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த துறை. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் அபரிமிதமான வளர்ச்சியை இந்த துறையும் சந்தித்து வருகிறது.

புவியியல் துறையானது, இயற்பியல் ரீதியான புவியியல் (பிசிக்கல் ஜியோகிராபி) மற்றும் மனிதன் தொடர்பான புவியியல் (ஹூமன் ஜியோகிராபி) என இரு பிரிவுகளையும் கொண்டுள்ளது. நல்ல பணி வாய்ப்பினை பெறுவதன் மூலம் தனக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் பயனுள்ளதாய் அமையும் இந்த துறையை மாணவர்கள் எந்தொவொரு தயக்கமும், சந்தேகமும் இல்லாமல் தேர்வு செய்யலாம்.

படிப்புகள்:
சில கல்வி நிறுவனங்களில் கலை பிரிவிலும் (பி.ஏ.,), ஏராளமான கல்வி நிறுவனங்களில் அறிவியல் பிரிவிலும் (பி.எஸ்சி.,) பட்டப்படிப்பாக வழங்கப்படுகிறது. இளநிலை, முதுநிலை, எம்.பில் மற்றும் பி.எச்டி., வரை இத்துறை சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய பாடங்கள்:
ஹைட்ராலஜி, பயோ-ஜியோகிரபி, லேண்ட்ஸ்கேப் இகோலஜி, ஓஷியனோகிராபி, கிளைமட்டாலஜி, ரீஜினல் ஜியோகிராபி மற்றும் கல்ச்சுரல் ஜியோகிராபி.

தேவைப்படும் திறன்:
புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம், சிறந்த பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி திறன், கண்ணக்கீட்டு திறன், ஊகித்தல் மற்றும் களப்பணி ஆற்றுவதற்கான மனம் மற்றும் உடல் திடம், எழுத்து மற்றும் பேச்சு திறன்.

வேலை வாய்ப்புகள்:
கல்வித் தகுதியுடன், துறை சார்ந்த கம்யூட்டிங் ஆற்றலையும் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நகர மற்றும் கிராம மேம்பாட்டுத் துறைகள், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கனிம வள ஆராய்ச்சியகம், மண் மற்றும் நீர் வளம் கணக்கீட்டு நிறுவனம் எனப் பல துறைகளில் வேலை வாய்ப்பினை பெறலாம். மேலும், சிவில் சர்வீசஸ் உட்பட பல்வேறு அரசு பொட்டித் தேர்வுகளுக்கும் இத்துறை சார்ந்த படிப்பு உதவுகிறது.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:
* ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி, டெல்லி
* லவ்லி பிரோபஷ்னல் யுனிவர்சிட்டி, பஞ்சாப்
* டெல்லி யுனிவர்சிட்டி, டெல்லி
* ராஜிவ் காந்தி யுனிவர்சிட்டி, கர்நாடகா
* யுனிவர்சிட்டி ஆப் மும்பை, மும்பை
* யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ், சென்னை

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us