‘படிக்கும்போதே பணித்திறன் பயிற்சி’ | Kalvimalar - News

‘படிக்கும்போதே பணித்திறன் பயிற்சி’ஆகஸ்ட் 07,2018,13:01 IST

எழுத்தின் அளவு :

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், சிவில் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கேட்ப, புதுவிதமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன!

பொதுவாக, படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த 2 ஆண்டுகளுக்கு பிறகே, அத்துறை சார்ந்த தொழில்நுட்ப அறிவு, தேவைப்படும் இதர திறன்கள் குறித்த அறிவை பெரும்பாலான இளைஞர்கள் பெறுகின்றனர். ஆனால், அத்தகைய திறன்களை, படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டியது இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை, படிக்கும் போதே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே, எனது கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு தொழில் நிறுவனத்தில் 2 ஆண்டுகளில் பெறக்கூடிய அதே அனுபவத்தை, படிக்கும்போதே மாணவர்கள் பெறும் வகையிலான வாய்ப்புகளும், சூழல்களும் இந்த கல்லூரியில் உருவாக்கித் தரப்படுகிறது. கல்லூரியில் சேர்ந்த முதல் 2 ஆண்டுகளில் தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கடைசி 2 ஆண்டுகள் ‘புராஜெக்ட்’, ‘இன்டர்ன்ஷிப்’ ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உதவித்தொகையுடன் கூடிய ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சியும், மாணவர்களுக்கு பெற்றுத்தரப்படுகிறது.

இன்று, பல்வேறு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் மட்டுமின்றி, அரசாங்கமே மாணவர்களுக்கு தொழில்நுட்ப போட்டிகளை நடத்துகின்றன. அவற்றில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதால், அத்தகைய போட்டிகளில் பங்கேற்கப்பதற்கு தேவையான பயிற்சி மற்றும் ஊக்கம், எனது கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

படித்துமுடித்த உடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிவாய்ப்பை பெற வேண்டும் என்றும் இன்றைய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்காவிற்கு இணையான வாய்ப்புகளை வேறு சில நாடுகளும் வழங்குகின்றன. அவை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு, வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது. குறிப்பாக, ஜப்பானில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், அங்குள்ள தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் குறித்த பயிற்சி மட்டுமின்றி, ஓர் ஆண்டு ஜப்பானிய மொழி பயிற்சியும் எனது கல்லூரியில் வழங்கப்படுகிறது.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உள்ள சிறந்த நிறுவனங்களில், ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சியையும் பெற்றுத்தருவதால், சர்வதேச அளவில் தேவைப்படும் திறன்களை அறிந்து, அதற்கேட்ப மாணவர்களே, அவர்களை, மெருகேற்றிக்கொள்ளவும் முடிகிறது. இவை மட்டுமின்றி, உயர்கல்விக்காக வெளிநாடு செல்லவும், சுயமாக தொழில் துவங்கவும்கூட ஊக்கம் அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும், பிற துறை சார்ந்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, மெக்கானிக்கல் படிக்கும் மாணவர்கள், அவர்களது துறை சார்ந்த அறிவுடன், ரோபாட்டிக்ஸ், ஆட்டோமேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல துறை சார்ந்த அறிவையும் சேர்த்தே வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான வாய்ப்பையும், வசதியையும் வழங்குவதோடு, மாணவர்கள் சிறப்பான எதிர்காலத்தைப் பெற தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

-பி.ஸ்ரீராம், தலைவர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us