‘படிக்கும்போதே சி.இ.ஓ., ஆகலாம்’! | Kalvimalar - News

‘படிக்கும்போதே சி.இ.ஓ., ஆகலாம்’!ஆகஸ்ட் 06,2018,14:05 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் அப்பாற்பட்டு, இன்ஜினியர் என்பவர் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தருபவராக செயல்பட வேண்டும். அதையே, தாரக மந்திரமாகக்கொண்டு எங்கள் கல்வி நிறுவனம் செயல்படுகிறது!

அதேவேளை, வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளித்து, சிறந்த வேலை பெறவும் ஊக்குவிக்கிறோம். இவ்வகையில், மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மாணவரிடமும், வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா? தொழில் முனைவோராக விரும்புகிறீர்களா? அல்லது உயர்கல்வி கற்க விரும்புகிறீர்களா? ஆகிய மூன்று தேர்வுகள் முன்வைக்கப்படுகிறது. அவற்றில், மாணவரது விருப்பத்திற்கு ஏற்ப, உரிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும், எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் பெறக்கூடிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும், ஒரு செமஸ்டருக்கு ஒரு தொழில்பட்ப பயிற்சி வீதம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துள்ள இன்ஜினியரிங் பாடத்திட்டம் பாதிக்கப்படாத வகையில், சனிக்கிழமைகளில் காலை நேரங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சிக்கும், மதிய நேரங்களில் விளையாட்டு, கிளப், பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இன்ஜினியரிங் பாடத்திற்கும், இதர திறன்வளர்ப்பிற்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இளம் சி.இ.ஓ.,
ஒரு புதிய முயற்சியாக, எங்கள் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எல்க்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய 5 துறைகளை சேர்ந்த மாணவர்களை, துறைக்கு ஒன்று வீதம் 5 தொழில் நிறுவனங்களை துவங்க அறிவுறுத்தியுள்ளோம்.

அதன்படி, ஒவ்வொரு நிறுவனமும், துறை சார்ந்து தலா மூன்று தொழில் வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். அவற்றில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து, அதில் சிறந்த தொழில் திட்டத்திற்கு நிதி உதவியும் அளிக்க உள்ளோம். இதன்மூலம், மாணவர்கள் படிக்கும்போதே சி.இ.ஓ., ஆவதோடு, தொழில் நிறுவனத்தை நிர்வகிக்க தேவைப்படும் பல்வேறு திறன்களையும் பெறுவார்கள்.

பேராசிரியரது கடமை
பெற்றோர், அவர்களது குழந்தைகள் மீது 12ம் வகுப்பு வரை அளவுக்கு அதிகமான அக்கறை செலுத்திவிட்டு, கல்லூரியில் சேர்த்த பிறகு, முழுவதுமாக தனித்து விடுகிறார்கள். இச்சூழலில், கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்கி, அதேவேளை, பாதை மாறாத வகையில் நல்வழிப்படுத்துவது ஒவ்வொரு பேராசிரியரது கடமை. பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் பேராசிரியரின் முயற்சி இவை இரண்டும் இருந்தால், ஒவ்வொரு மாணவரும் சாதனையாளராக வளம் வருவர்! 

-கே.பன்னீர்செல்வம், இயக்குனர், ஸ்ரீகுரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us