ஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்? | Kalvimalar - News

ஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

+2ல் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருப்போர் இந்தத் தேர்வை எழுதலாம். மேலும் இயற்பியல் அல்லது வேதியியலையும் ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியுயடையவரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் வயது 17 முதல் 21க்குள் தான் இருக்க வேண்டும்.

இந்தத் தேர்வானது ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டியதாகும். +2 தரத்தில் கேள்விகள் அமையும்.

முதல் தாளில் கேள்விகள் ஆங்கிலம், பொது அறிவு மற்றும் உளவியல் திறன்களை அறிவதாக இருக்கும். 2ம் தாளில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 3ம் தாளில் கணிதத்திலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். 11 மற்றும் 12வது வகுப்பு தரத்தில் கணிதக் கேள்விகள் கேட்கப்படும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us