காஸ்மெடாலஜி துறை | Kalvimalar - News

காஸ்மெடாலஜி துறைஜூலை 26,2018,11:58 IST

எழுத்தின் அளவு :

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நாகரீக முன்னேற்றங்களால் புதிய உச்சத்தை அடைந்துள்ள துறை ‘காஸ்மெடாலஜி’! சவால்கள் நிறைந்த அழகூட்டும் சிகிச்சைக்கான படிப்பு இது!

முக்கியத்துவம்:
இன்றைய சூழலில் ஆண், பெண், வசதி குறைந்தவர், வசதி படைத்தவர் என்கிற பாகுபாடுமின்றி, உலகில் உள்ள அனைவரும் விரும்புவது ஆரோக்கியத்துடன் கூடிய அழகு. அழகு சிகிச்சைகள், மருத்துவ கவனிப்புகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களது இத்தகைய விருப்பத்தை நிறைவேற்றுவதே ஒரு காஸ்மெடலஜிஸ்டின் கடமை.

தலை முடி முதல் கால் நகங்கள் வரை அனைத்தையும் அழகுப்படுத்தி, அதன் ஆரோக்கியத்திற்கான அறிவுரைகளையும் பெறப் பலரும் ஆர்வமாக இருப்பதால் இந்த துறைக்கான எதிர்காலம் மிக பிரகாசமாக இருப்பதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிறப்பு பிரிவுகள்:
சிகை அலங்காரம் மற்றும் பராமரிப்பு, மேனி பாதுகாப்பு, ஒப்பனை மற்றும் எலக்ட்ராலஜி

தேவைப்படும் திறன்கள்:
* அழகியல் துறை சார்ந்த புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன்.
* உடல் ரீதியான பராமரிப்புகள் மட்டுமின்றி மனதளவிலும் ஒரு நபரைத் தேற்றும் பேச்சாற்றல்.
* எந்தவொரு பிரச்சனைக்கும் சரியான தீர்வினை கண்டறியும் திறன்.

படிப்புகள்:
எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் எம்.டி., அல்லது டி.என்.பி., என்கிற கூடுதல் சிறப்பு படிப்புகளின் மூலம் இத்துறை வல்லுநர் ஆகலாம். இதைத்தவிர பள்ளி படிப்பு முடித்த உடனேயே இதற்கான பிரத்யேக படிப்புகளில் சேரலாம்.

வேலை வாய்ப்புகள்:
கஸ்மெடிக் நிறுவனங்களில் இத்துறை பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவாகவே இது இருப்பதால் அங்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும், பிரபலங்கள், சினமா நடிகர்கள், தொலைக்காட்சி நெறியாளர்கள் போன்றோர்களுக்கு ஆலோசகராக செயல்படலாம். அரசு அங்கீகாரம் பெற்றவர்கள், தனியாக மருத்துவமனை மற்றும் கஸ்மெட்டிக் நிறுவனங்களைத் துவங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:
* அனூஸ் இன்டர்நேஷனல் பியூட்டி சலூன், ஐதராபாத்
* பியர்ல் அகாடமி ஆப் பேஷன், சென்னை
* இண்டோ-கனாடியன் நேஷனல் அகாடமி, மும்பை
* கிரிம்சான் இன்ஸ்டிடியூட், மும்பை
* இன்டர்நேஷனல் பாலிடெக்னிக் பார் வுமென், டில்லி

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us