பேஷன் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் | Kalvimalar - News

பேஷன் மற்றும் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள்ஜூலை 18,2018,15:50 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் வணிக ரீதியாக உச்சத்தில் இருக்கும் ஒரு முக்கிய துறை இது! ‘டிரென்டிங் ஸ்டைல்’ அதாவது மக்களின் நவீன கால ரசனை பற்றிய புரிதலும், அதிக ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் இந்தத் துறையில் ஜொலிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன!

பேஷன்: பேஷன் என்பது ஆடை வடிவமைப்பது மட்டுமல்ல, படைப்பாற்றல் சார்ந்த எண்ணற்ற பிரிவுகள் அதனுள் அடங்கி உள்ளன. அது அணிகலன்கள், ஒப்பனைகள், பேக், ஷூ, வீட்டு அலங்காரப் பொருட்கள் என எதுவாகவும் இருக்கலாம்!

ஆடை வடிவமைப்பு, அதற்கேற்ப அணிகலன்கள், கைவினைப் பொருட்கள் என எந்த ஒரு விஷயத்தையும் அழகு படுத்துவதே, ஒரு பேஷன் கலைஞரின் கடமை. மேலும், பேஷன் துறையில் சாதனை படைப்பது என்பது ஆர்ட் அண்ட் டிசைன், கம்யூனிகேஷன் மற்றும் ஒரு பொருளை காட்சிப்படுத்தும் திறமையை பொறுத்தது.

இன்டீரியர் டிசைனிங்: இதுவும் பேஷன் துறையின் ஒரு கிளை பிரிவு தான். வீடு, அலுவலகம், தியேட்டர், ஷோ ரூம்ஸ், ஹோட்டல்ஸ் என எந்தவொரு இடத்தின் உள்கட்டமைப்பையும், தனது புத்தாக்க சிந்தனையின் மூலம் மேலும் அழகாக மாற்றுவதே இன்டீரியர் டிசைனரின் வேலை. சுவரின் வண்ணங்களுக்கேற்ப அலங்காரப் பொருட்களை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துவது, தீம் ரெஸ்டாரண்ட் என்றால் அதற்கேற்ப பொருட்களை தேர்வு செய்வது என முழுக்க முழுக்க ரசனை மிகுந்த ஒரு பணிதான் இது!

படிப்பு நிலைகள்
இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

முக்கிய பிரிவுகள்
பேஷன் மார்க்கெட்டிங் அன்ட் புரோமோஷன், பேஷன் மீடியா கம்யூனிகேஷன், இண்டீரியர் ஆர்கிடெக்சர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், பேஷன் பிராண்ட் மேனேஜ்மெண்ட், அக்ஸஸரி டிசைன், லெதர் டிசைன், காஸ்ட்யூம் அன்ட் பேஷன் டெக்னாலஜி, ஜூவல்லரி டிசைன்.

தகுதிகள்
பேஷன் துறைக்கு மிக முக்கிய தேவையானது, ‘கிரியேடிவிட்டி’ தான். ஒரு விஷயத்தை வித்தியாசமாகவும், அழகாகவும் சிந்திக்கும் திறன், புதுப் புது டிரெண்டுகளுகேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, வேகமாக புது நுட்பங்களைக் கற்று தேருதலும் அவசியம். இந்தத் திறன்களை தவிர பட்டபடிப்புகளில் சேர்க்கை பெற, பள்ளி மேல்நிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தகுதிகள் மாறுபடுகிறது.

வேலை வாய்ப்புகள்: இந்தியாவில் பேஷன் துறைக்கென ஒரு தனி இடம் உருவாகி வருகிறது. கடின உழைப்பும், புத்தாக்க சிந்தனையும், ஆர்வமும் கொண்ட திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் குவிந்து இருக்கின்றன. பெரிய நிறுவனங்களில் டிசைனாராக பணியில் சேரலாம் அல்லது சொந்தமாக தனக்கும் பிடித்த பாணியில் சிறு முதலீட்டுடன் பொட்டிக், டிசைனிங் ஏஜென்சி போலவும் நடத்தலாம். தனக்கென ஒரு இணையத்தளத்தை துவங்கி விற்பனையை பெருக்கலாம்.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, சென்னை மற்றும் மும்பை
* பேர்ல் அகாடமி, புதுடில்லி
* வாக் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, பெங்களூரு
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், அகமதாபாத்
* சி.இ.பி.டி., பல்கலைக்கழகம், குஜராத்

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us