மல்ட்டி மீடியா மற்றும் அனிமேஷன் | Kalvimalar - News

மல்ட்டி மீடியா மற்றும் அனிமேஷன்ஜூலை 09,2018,12:09 IST

எழுத்தின் அளவு :

பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றுவரும் ஐ.டி., துறைக்கு ஈடாக, இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகின்ற துறை, ‘மல்ட்டி மீடியா மற்றும் அனிமேஷன்’!

தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகள் பெருகிக்கொண்டே வரும் நிலையில் டிசைனர், அனிமேட்டர், கேம் புரோக்ராமர், சி.ஜி.ஆர்டிஸ்ட், என மாணவர்கள், அவரவர்களுக்கு பிடித்தமான பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு இத்துறையில் உண்டு.

மல்ட்டி மீடியா: எக்ஸ்ட், ஆடியோ, கிராபிக்ஸ், அனிமேஷன், வீடியோ மற்றும் இண்டராக்டிவ் கண்டன்ட் ஆகியன இத்துறையில் கற்று தரப்படுகிறது. அனிமேஷன் மற்றும் கேமிங் போன்றவையும் மல்ட்டிமீடியாவை அடிப்படையாகக் கொண்டதே!

அனிமேஷன்: அனிமேஷன் என்பது அதிகமான கம்பியூட்டர் கிராபிக்ஸ் பயன்பாடு, வரைபடங்களை மோஷன் பிக்சர்ஸாக மாற்றுவது. கேம் டிவலெப்பிங் பணிகளிலும் இதுவே பயன்படுத்தப்படுகிறது. 2டி, 3டி, விர்ச்சுவல் ரியாலிட்டி என இதன் பிரிவுகளும் அதிகம்.

படிப்பு நிலைகள்: இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

பிரிவுகள்: அனிமேஷன் அண்ட் கம்பியூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் பிலிம் மேக்கிங், வி.எப்.எக்ஸ்., பிரிண்ட் மேக்கிங் அண்ட் கிராபிக் டிசைன், விஷ்வல் எபக்ட்ஸ், கேம் டிசைனிங் அண்ட் டெவலப்மெண்ட், வெப் டிக்னாலஜி, டிஜிட்டல் மீடியா, 2டி அண்ட் 3டி அனிமேஷன், ஸ்பெஷல் எபக்ட்ஸ், பிராட்கேஸ்ட் அனிமேஷன், கார்டூன் அனிமேஷன்.

தேவைப்படும் திறன்: கிரியேடிவிட்டி, படம் வரையும் திறன், கம்பியூட்டர் மற்றும் சாப்ட்வேர்கள் பற்றிய புரிதல், தொழில்நுட்பங்களை வேகமாகக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் வித்தியாசமான படைப்புகளை உருவாக்கும் திறன்.

தகுதி: இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ அனிமேஷன் மற்றும் மல்ட்டி மீடியா தொடர்பான படிப்புகளுக்கான அடிப்படைத் தகுதி பெரும்பாலும் ஒன்றே. இளநிலை படிப்பிற்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், டிப்ளமா படிப்புகளுக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். சில கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர்களின் துறை சார்ந்த அறிவைச் சோதித்து சேர்க்கை நடத்துகின்றன.

வேலை வாய்ப்புகள்:
கிராபிக் டிசைனர், மல்ட்டி மீடியா டெவலப்பர் மற்றும் கேம் டெவலப்பர் எனப் பல துறைகளில் வேலை வாய்ப்பினை பெறலாம். உதாரணத்திற்கு அட்வர்ட்டைசிங், ஆன்லைன் அண்ட் பிரிண்ட் நீயூஸ் மீடியா, பிலிம் அண்ட் டெலிவிஷன், கார்டூன் புரடக்சன், திரைப்படங்கள், வீடியோ கேமிங், இ-லேர்னிங் போன்ற துறைகளில் வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிலிம் அண்ட் பைன் ஆர்ட்ஸ் (என்.ஐ.எப்.எப்.ஏ.,), கொல்கத்தா
* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, நொய்டா
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்.ஐ.டி.,), அகமதாபாத்
* வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் மற்றும் சென்னை
* சுப்புலட்சுமி லட்சுமதி அறிவியல் கல்லூரி, மதுரை

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us