மெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்? | Kalvimalar - News

மெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கடல் பயணத்தை விரும்புபவராகவும் வழக்கமான ஆபீஸ் பணிகளை வெறுப்பவராகவும் நீங்கள் இருந்தால் உங்களுக்கு மெர்ச்சன்ட் நேவி பணி மிகவும் பொருந்தும். வீட்டை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பதற்கும் நீங்கள் தயாராக வேண்டும். ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்திற்கு சரக்குகளை எடுத்துச் சென்று இறக்கி இது போலவே பிற இடங்களிலிருந்தும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு

பயணிப்பதே மெர்ச்சன்ட் நேவியின் முக்கியப் பணி.

+2 முடித்த பின்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தபின்பு மெர்ச்சன்ட் நேவியில் சேர முடியும். +2 முடித்த பின்பு சேர விரும்புவோர் அதில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தைப் படித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்த பின் சேர விரும்புவோர் நாடிகல் சயின்ஸ் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மிகச் சிறப்பான சம்பளத்தைக் கொண்டிருப்பவை இந்த பணிகள்.

பி.இ., மரைன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளை படித்தவருக்கு மெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் சற்றே எளிதாகக் கிடைக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us