இன்ஜினியரிங் டிப்ளமா | Kalvimalar - News

இன்ஜினியரிங் டிப்ளமாஜூன் 18,2018,17:00 IST

எழுத்தின் அளவு :

பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே இன்ஜினியரிங் துறையில் நுழைய விரும்பும் மாணவர்களுக்கான படிப்பு, ‘டிப்ளமா இன் இன்ஜினியரிங்’!

முக்கியத்துவம்:
டிப்ளமா படிப்பில் மாணவர்களுக்குத் தொழிற்கல்விக்கான பயிற்சிகளே அதிகமாக வழங்கப்படுவதால், பணி வாய்ப்புகள் இவர்களுக்கு எப்போதும் பிரகாசம்!

4 ஆண்டுகள் கொண்ட பி.இ., / பிடெக்., போன்ற இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களையும் கட்டாயம் படித்திருக்க வேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்பை படிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மேலும், டிப்ளமா படித்த மாணவர்கள் பிற்காலத்தில், பி.இ., படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

‘லேட்ரல் என்ட்ரி’:
டிப்ளமா முடித்தவர்கள் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற விரும்பினால், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம். இதனை ‘லேட்டரல் என்ட்ரி’ என்பர். இந்த மாணவர்கள் 3வது செமஸ்டர் அதாவது இரண்டாம் ஆண்டிலிருந்து அவர்களது இன்ஜினியரிங் பட்ட படிப்பைத் துவங்கலாம்.

இன்ஜினியரிங்கில் டிப்ளமா படிப்பை முடித்து லேட்ரல் என்ட்ரி மூலம் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்குத் துறை சார்ந்த புரிதலும் தொழிற் கல்வி தொடர்பான பயிற்சியும் அதிகம் இருப்பதால் வேலையில் சேரும் போது இது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

தகுதி:
மூன்று ஆண்டுகள் டிப்ளமா படிப்பில் சேர, பத்தாம் வகுப்பில் குறைந்தது, 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்தத் துறையில் டிப்ளமா கல்வி பெற்றிருக்கிறார்களோ அது சார்ந்த துறையிலேயே வாய்ப்பு வழங்கப்படும். வெவ்வேறு வித்தியாசமான துறையை தேர்வு செய்ய இயலாது. ஒரு சில கல்வி நிறுவனங்கள் ‘லேடரல் என்ட்ரி’ பெறும் மாணவர்களுக்கு வயது வரம்பை நிர்ணயித்துள்ளன.

சேர்க்கை முறை:
டிப்ளமா பட்டம் பெற்ற மாணவர்கள், அதே மாநிலத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் மட்டுமே லேட்ரல் என்ட்ரி மூலம் பி.இ.,/பி.டெக்., சேர்க்கை பெற அனுமதி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

‘லேட்ரல் என்ட்ரி’ வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

* அண்ணா பல்கலை
* வி.ஐ.டி., வேலூர்
* எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம்
* பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலாஜி, கோவை
* சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில், டிப்ளமா மாணவர்களுக்காக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us