புள்ளியியல் படிக்கலாமே! | Kalvimalar - News

புள்ளியியல் படிக்கலாமே!ஜூன் 14,2018,16:28 IST

எழுத்தின் அளவு :

எண்கள் மற்றும் கணிதத்தில் அதிகம் ஆர்வம் கொண்ட மாணவரா நீங்கள்? ஆம் என்றால் வங்கிகள் முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பணி வாய்ப்புகளை வழங்கும் புள்ளியியல் துறையைத் தேர்வு செய்யலாமே!

முக்கியத்துவம்
அறிவியல் சார்ந்த கணித பாடப் பிரிவே புள்ளியியல். தகவல்களைத் திரட்டி, பகுப்பாராய்ந்து, தொடர்புப்படுத்தி, விவரங்களை வரைபடமாக விளக்குவதே புள்ளியியலாளரின் வேலை. இதன் மூலம் கிடைக்கும் புள்ளியியல் விவரங்கள் துறை சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதுடன் அதன் போக்கை முன்னதாகவே கணிக்கவும் உதவுகிறது.

புள்ளியியல் படிப்புடன் பொருளாதாரம், கணினி மற்றும் நிர்வாகவியல் திறன்கள் பெற்றிருப்பது, இந்தத் துறையில் நல்ல வாய்ப்புகளைப் பெற்று தரும். இந்தப் படிப்பில் சேர 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

படிப்பு நிலைகள்
இளநிலை, முதுநிலை, எம்.பில்., -பிஎச்.டி. மற்றும் டிப்ளமா

வேலை வாய்ப்புகள்
பேராசிரியர், கன்டன்ட் அனலிஸ்ட், ஸ்டாட்டிஸ்டிக் டிரைனர் மற்றும் டேட்டா சயின்டிஸ்ட் போன்ற வேலை வாய்ப்பைப் பெறலாம். புள்ளியியலாளராகப் பணியாற்ற, புள்ளியியல் தத்துவங்களை சரியாகச் செயல்படுத்தும் திறமை, கணிதம் மற்றும் தர்க்க அறிவுடன் விடாமுயற்சியும் அதிகம் தேவை. மத்திய அரசின் சிவில் சர்வீசஸ், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகளிலும் நல்ல வாய்ப்புகள் உள்ளன.

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
* இந்தியன் ஸ்டேட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட், கொல்கத்தா
* செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி,  புதுடில்லி
* செயின்ட்சேவியர்ஸ் கல்லூரி, மும்பை
* இந்து கல்லூரி, டில்லி
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, உத்தர பிரதேசம்

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ஸ்டேட்டிஸ்டிக் இன்ஸ்டிடியூட் (ஐ.எஸ்.ஐ.,), புள்ளியியல் சார்ந்த படிப்புகளை படிக்க சிறந்த கல்வி நிறுவனமாகும். இதன் வளாகங்கள், சென்னை, கொல்கத்தா, டில்லி, பெங்களூரூ, ஐதராபாத் மற்றும் தேஜ்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us