’திறன், ஒழுக்கம் இரண்டும் முக்கியம்’ | Kalvimalar - News

’திறன், ஒழுக்கம் இரண்டும் முக்கியம்’மே 25,2018,15:11 IST

எழுத்தின் அளவு :

36 ஆண்டுகளாக கல்வி சேவையில் ஈடுபட்டுள்ள கலசலிங்கம் கல்வி நிறுவனக் குழுமத்தின், மற்றொரு பிரத்யேக பொறியியல் கல்வி நிறுவனம் தான் ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி!

இக்கல்வி நிறுவனம் 16 ஆண்டுகளாக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் மற்றும் சிவில் ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளும், எம்.இ., மற்றும் எம்.பி.ஏ., ஆகிய முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன. தவிர, ஆனந்த் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் கல்வி நிறுவனமும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது !

ஒவ்வொரு ஆண்டும் எங்களது அனைத்து துறை மாணவர்களும் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் தொழில்நுட்ப போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகின்றனர். குறிப்பாக, ரேஷன் அட்டைகளுக்கு பயன்படும் வகையில், ஸ்மார்ட் கார்டில் பிரத்யேக தொழில்நுட்ப வசதியை தயாரித்ததிற்காக தமிழக முதல்வரிடம் விருது பெற்றுள்ளனர்.

பேராசிரியர்களின் கற்பித்தல் மேம்பாட்டிற்காக, இரண்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பு போல கரும்பலகை வழியான கற்பிக்கும் முறை இன்றைய நிலைக்கு சரிபட்டு வராது. தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் காலக்கட்டத்தில், கற்றல், கற்பித்தல் முறையே மாறிவிட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இணக்கமான சூழல் நிச்சயம் தேவைப்படுகிறது. எனினும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில், ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள் நினைத்தால் எந்த மாணவரையும் மாற்றிவிட முடியும் என்பதும், எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும் என்பதும், எனது அசைக்க முடியாத நம்பிக்கை!

தொழில் துவங்க விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்,  ’டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர்’ எனும் சிறப்பு தொழில்நுட்ப மையத்தை வளாகத்தில் செயல்படுத்துகிறோம்.  எங்கள் கல்வி நிறுவன முன்னாள் மாணவர்கள், அம்மையத்தில்  ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஆரம்பித்துள்ளனர். அந்நிறுவனங்கள், தற்போதைய மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்குகின்றன.

எங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைப் ஏற்படுத்துக் கொடுக்க பெரும் சிரத்தை எடுக்கும் அதேநேரம், இன்றைய மாணவர்களும், அவர்களது துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் என்னனென்ன உள்ளது? மற்றும் அவை எதிர்பார்க்கும் திறன்கள் யாவை? ஆகியவற்றை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கேட்ப தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு அவர்களுக்கு எளிதாகும் என்பது மறுக்க முடியாத உண்மை! எங்கள் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிப்பதோடு மட்டுமின்றி, மாணவர்கள் நற்பண்புகளை பெற்றவர்களாகவும் இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய ஊக்குவிக்குறோம்.

இவைமட்டுமல்லாமல், கல்வி நிறுவன வளாகத்திலேயே செயல்படும் ஆராய்ச்சி மையம் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் புத்தாக்க சிந்தனைக்கும், ஆராய்ச்சி ஆர்வத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எதிர் காலத்தில் இக்கல்வி நிறுவனத்தையே ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்!

-அறிவழகி, செயலர், ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி, சென்னை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us