‘தரமான கல்வியே தாரகமந்திரம்’ | Kalvimalar - News

‘தரமான கல்வியே தாரகமந்திரம்’மே 24,2018,15:31 IST

எழுத்தின் அளவு :

கிராமப்பின்னணியில் இருந்து வந்ததால், மக்களின் தேவையைப் புரிந்து, பிறகுக்கு உதவி செய்யும் நோக்கில் 1998ம் ஆண்டு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியைத் துவக்கினோம். மக்களின் ஆதரவால், பள்ளி, பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களையும் துவக்கினோம். எங்கள் கல்வி நிறுவனத்தை நம்பி சேரும் மாணவர்களது தேவையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதில், இன்றளவும் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம்!

27 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கும் மிகப் பெரிய நிறுவனமாக தற்போது வளர்ந்துள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் தேவையான பயிற்சியையும், பாதுகாப்பையும் வழங்குவதோடு, சிறந்த வேலை வாய்ப்பை பெற உதவுதும் எங்களது கடமையாக கருதுகிறோம்.

அதன்படி, கல்வி நிறுவனத்தில் சேரும் ஒவ்வொரு மாணவரும், வகுப்பறை பாடத்தோடு, செயல்முறை பயிற்சியும் பெற்று, அவரவர் துறையில் தெளிவு பெறும் வகையிலான செயல்திட்டங்களை வகுத்துள்ளோம். நாக், என்.பி.ஏ., போன்ற தரவரிசையில் முன்னணி இடத்தை பெற்றுள்ளோம்.

ஒவ்வொரு படிப்பும் மாணவர்களுக்கு எந்தளவுக்கு பயன்படும், அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்பதை ஆராய்ந்து பார்த்தே புதிய படிப்புகளை துவக்குகிறோம். அந்தவகையில், அனிமேஷன், புட்டெக்னாலஜி, பயோ மெடிக்கல், அக்ரிகல்ச்சர் ஆகிய படிப்புகளை இந்தாண்டு எங்கள் கல்வி நிறுவனத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.

என்றுமே பொழிவு இழக்காத அறிவியல் துறைகளிலும் இன்று மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பயோடெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி போன்ற பிரிவுகளிலும் மாணவர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். பாடப்பிரிவை தேர்வு செய்வதில், மாணவர்களின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறோம்.

கல்லூரியில் சேர்ந்தது முதற்கொண்டு மாணவர்களுக்கான கூடுதல் திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். அதன்படி, வங்கி பயிற்சி, சி.ஏ., பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி, எம்பெடட், பைத்தான் உட்பட அனைத்து வகையான திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

எங்களது மாணவர்கள், உள்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி எங்கு சென்றாலும் முன்னணி வகிக்கும் வகையில், பாடத்திட்டத்தை புதுப்பித்து வருகிறோம். மாணவர்களுடைய மனநிலையை புரிந்த, அனுபவமுள்ள ஆசிரியர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், பெற்றோர்களது எதிர்பார்ப்பை எங்களால், எளிதில் பூர்த்தி செய்ய முடிகிறது.

ஒட்டுமொத்தமாக தரமான கல்வியைத் தர வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். அதற்கு, ஆசிரியர்களும், இதர பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். இத்தகைய சிறப்பம்சங்களை பெற்ற இக்கல்வி நிறுவனம் எதிர்காலத்தில் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் எங்களது குறிக்கோள்!

-சரஸ்வதி கண்ணையன், செயலர் மற்றும் பிரியா சதீஷ் பிரபு, துணை செயலர், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், கோவை.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us