வெற்றிக்கு வழிவகுக்கும் ஐ.க்யூ.,! | Kalvimalar - News

வெற்றிக்கு வழிவகுக்கும் ஐ.க்யூ.,!ஏப்ரல் 17,2018,12:27 IST

எழுத்தின் அளவு :

ஒருவரது பொதுவான குணாதிசயங்களை விட, ஐ.க்யூ., எனும் நுண்ணறிவு திறன் தான், பெரும்பாலும் அவரது வெற்றியை தீர்மானிக்கிறது என்று, பிரிட்டனைச் சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக்கழகம் உட்பட பல நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன!
 
அதிக ஐ.க்யூ., திறன் பெற்றுள்ளவர்களிடம், மற்றவர்களை அரவணைத்து செல்லும் பண்பு அதிகமாக இருக்கிறது. அதன்மூலம், அதிக வருமானத்தை அவர்களால் ஈட்ட முடிகிறது. தோல்விகளை சந்திப்பவர்களில் பெரும்பாலானோர், குறைந்த ஐ.க்யூ., திறன் பெற்றவர்களாகவும், ஒவ்வொரு செயலிலும் எதிர்கால விளைவுகளை பற்றி கவலைப்படுபவர்களாகவும், ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுபவர்களாகவும் அவர்கள் இருப்பதாக, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

‘சாதகமான மனநிலையுடன், மற்றவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதால், அவருக்கு மட்டுமின்றி அவர் சார்ந்த அனைவருக்கும் அளவில்லா பயன்கள் கிடைக்கின்றன’ என்று ஆராய்ச்சியாளர்கள் ஆணித்தனமாக அறிவுறுத்துகின்றனர்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us