‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ | Kalvimalar - News

‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ஏப்ரல் 06,2018,15:43 IST

எழுத்தின் அளவு :

‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ என்பது விஞ்ஞானமும், பொறியியலும் இணைந்த ஒரு நவீன துறை!

ஒரு பணியை செய்ய மனிதனுக்குத் தேவைப்படுகிற நுண்ணறிவு திறனை செயற்கையாக உருவாக்கி, இயந்திரத்திற்கு மனிதர்களைப் போன்ற பார்க்கும், சிந்திக்கும், பேசும், முடிவெடுக்கும் திறன்களை தர முயல்கிறது இத்துறை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், புத்திசாலித்தனமிக்க, அறிவார்ந்த கணினி இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்!

நம்மில் பலருக்கும் மிகவும் பரிட்சையமான ‘ஐபோன் சிரி’, ‘வாய்ஸ் ஆப் கூகுள்’, ‘அமேசானின் அலெக்சா’ போன்ற சாப்ட்வேர்கள் அனைத்தும் ‘ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்’ படைப்புகள் தான். சமீப காலமாக, உலகத்தையே தன் வசப்படுத்தி வைத்திருக்கும், ‘விரிட்சுவல் ரியலிட்டி - விடியோ கேம்’களின் அடுத்தகட்ட வளர்ச்சியாகவும், ‘ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்’ விளங்குகிறது. இத்தொழில்நுட்பம் சார்ந்த ஏராளமான விளையாட்டுகளை உருவாக்குவதில் ‘கேமிங்’ நிறுவனங்கள் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஆகையால் இந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு ‘விடியோ கேம் டெவலப்பிங்’ துறையிலும், கம்பியூட்டர் சயின்ஸ், மிஷின் இன்டெலிஜன்ஸ் பிரிவுகளின் கீழ் ஆராய்ச்சி மையங்களிலும் மற்றும் அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசம். இவை தவிர கூகுள், பேஸ்புக், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களில், ரோபாடிக் ஆராய்ச்சியாளர், சாப்ட்வேர் இன்ஜினியர், கம்பியூட்டர் சயின்டிஸ்ட் போன்ற வேலைவாய்ப்புகளும் உண்டு.

தகுதிகள்: இளநிலை பட்டப் படிப்பில் சேர 12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு பி.எஸ்சி., /பி.இ.,/பி.டெக்., படிப்புகளில் கணிதம் மற்றும் கணினி முக்கிய பாடங்களாக கற்றிருக்க வேண்டும்.

கற்பிக்கப்படும் முக்கிய பாடங்கள்: மிஷின் லேர்னிங், நியூரல் நெட்வொர்க்ஸ், கம்புடேஷ்னல் இன்டெலிஜன்ஸ், இமேஜ் பிராசசிங் - மிஷின் விஷன், மாடலிங் - சிமுலேஷன் ஆப் டிஜிட்டல் சிஸ்டம் மற்றும் ஹூயுமன் கம்பியூட்டர் இண்ட்ராக்சன். 

சிறந்த கல்வி நிறுவனங்கள்:
ஐ.ஐ.டி.,-மும்பை
ஐ.ஐ.டி.,-சென்னை
ஐ.ஐ.எஸ்சி.,-பெங்களூரு
ஐ.எஸ்.ஐ.,-கொல்கத்தா

மேலும், ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி-அமெரிக்கா
ஹார்வர்டு யூனிவர்சிட்டி-அமெரிக்கா
நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி-சிங்கப்பூர்
முனீச் யுனிவர்சிட்டி-ஜெர்மனி
போன்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்கவை.

 

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us