பயோமெடிக்கல் இன்ஜினியரிங் | Kalvimalar - News

பயோமெடிக்கல் இன்ஜினியரிங்மார்ச் 19,2018,12:00 IST

எழுத்தின் அளவு :

அறிவியல் ரீதியான ஆற்றல் மற்றும் புதுமையான பொறியியல் தொழில்நுட்ப சிந்தனைகளுடன், மருத்துவ துறை சார்ந்த பங்களிப்புகளை வழங்கக் கூடிய ஒரு படிப்பு, பயோமெடிக்கல் இன்ஜினியரிங்! 

பொறியியல் படிப்பிற்கும், மருத்துவ படிப்பிற்கும் இடையே ஒரு பாலமாக ‘பயோமெடிக்கல் இன்ஜினியரிங்’ உள்ளது என்றும் சொல்லலாம். மருத்துமனைகளில் நாம் பார்க்கும் ஸ்கேனிங், இ.சி.ஜி., அல்ட்ராசவுண்ட் போன்ற இயந்திரங்கள் எல்லாம், பயோமெடிக்கல் இன்ஜினியர்களின் படைப்புகள் தான்.

பொறியியல் செயல் திறன்களை மருத்துவ துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதோடு, மருத்துவ துறையை விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் அடுத்த படிக்கு உயர்த்தக் கூடிய புதுமையான பல யோசனைகளையும் வரவேற்கும் ஒரு இன்ஜினியரிங் பிரிவு இது.

கற்பிக்கப்படும் பாடப்பிரிவுகள்: பயோமெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோமெக்கானிக்ஸ், பையோ-மெட்டிரியல்ஸ், ஜெனிடிக் இன்ஜினியரிங், பயோ-இன்ஸ்ட்ருமென்டெஷன், கம்பியூட்டர் மாடலிங், மெடிக்கல் இமேஜிங் போன்றவை.

தேவைப்படும் திறன்கள்: இத்துறையில் ஜொலிக்க தேவைப்படுகின்ற முக்கிய திறன்கள், இன்றைய மருத்துவ சிகிச்சை முறை பற்றிய புரிதலும், அதற்காக புதுவிதமான கருவிகளை வடிவமைக்கும் ஆற்றலும் தான்.

தகுதி: நான்கு ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் படிப்பான, பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிக்க, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டும்.

முக்கிய கல்வி நிறுவனங்கள்: ஐ.ஐ.டி.,- மும்பை, ஐ.ஐ.டி.,- டில்லி, ஐ.ஐ.டி.,- ரூர்க், மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி, ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ், புதுடில்லி.

வேலைவாய்ப்பு: மருத்துவ சாதனங்களை உருவாக்குதிலும், அவை தொடர்ந்து சரிவரச் செயல்படுகிறதா என்பதைக் கவனிப்பதிலும், பயோ மெடிக்கல் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. உயிரியலும், மருத்துவமும் இன்ஜினியரிங்குடன் இணைந்த துறை இது என்பதால் மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும் அதற்கான சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங்களிலும் இப்படிப்புப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. வெளிநாடுகளில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கருவிகளைப் பராமரிப்பதற்காக பயோ மெடிக்கல் இன்ஜினியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். செல்லுலார், திஷ்யு ஆய்வு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உள்ளது.

எதிர்காலம்: மருத்துவ துறை தொழில்நுட்ப ரீதியாக அடைய வேண்டிய வளர்ச்சியும், அவற்றை பராமரித்து மேன்மேலும் நவீனப்படுத்த வேண்டிய தேவையும் அதிகம் உள்ளதால், அடுத்த 50 ஆண்டுகளில் இத்துறை தவிர்க்க முடியாத ஒன்றாக வளரும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு!

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us