ஆஹா ஐ.சி.டி.,! | Kalvimalar - News

ஆஹா ஐ.சி.டி.,!மார்ச் 10,2018,12:06 IST

எழுத்தின் அளவு :

ரசாயன துறையில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கான சிறந்த, மத்திய அரசு கல்வி நிறுவனம், ‘இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாஜி’!

முக்கியத்துவம்
இந்நிறுவனம், 1993ம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்டு, 2008ம் ஆண்டு நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை பெற்றது.  மும்பையில் உள்ள, இந்த தேசிய கல்வி நிறுவனம், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்(ஐ.ஐ.எஸ்சி.,), தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.எஸ்.இ.ஆர்.,) உள்ளிட்ட மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது.

ரசாயனம், உயிரியல், பொருட்கள் மற்றும் ஆற்றல் தாயாரிப்பு போன்ற துறைகளில் தொழில்நுட்ப யுத்திகளை கையாளும் வகையிலும், உற்பத்தி சாதனங்களை வடிவமைக்கும் திறன்களை மெருகேற்றி கொள்ளும் வகையிலும், பாடத்திட்டங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இளநிலை படிப்புகள்
பி.கெம்.இன்ஜி.,(கெமிக்கல் இன்ஜினியரிங்)

பி.டெக்., படிப்பில் டைஸ்டப் அண்ட் இன்டர்மீடியேட் டெக்னாலஜி, பைபர் மற்றும் டெக்ஸ்டைல் புராசசிங் டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங் டெக்னாலஜி, ஆயில், ஒலியோகெமிக்கல்ஸ் மற்றும் சர்பாக்டாண்ட்ஸ் டெக்னாலஜி, பார்மாசியூடிகல்ஸ் கெமிஸ்டரி டெக்னாலஜி, பாலிமர் இன் ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி

பி.பார்ம்.,

சேர்க்கை முறை: அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக படித்து, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜே.இ.இ., மெயின் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

முதுநிலை பட்டப்படிப்புகள்
எம்.கெம்.இன்ஜி.,(மாஸ்டர் ஆப் கெமிக்கல் இன்ஜினியரிங்)

எம்.டெக்., படிப்பில் டைஸ்டப் அண்ட் இன்டர்மீடியேட் டெக்னாலஜி, பைபர் மற்றும் டெக்ஸ்டைல் புராசசிங் டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங் டெக்னாலஜி, ஆயில், ஒலியோகெமிக்கல்ஸ் மற்றும் சர்பாக்டாண்ட்ஸ் டெக்னாலஜி, பார்மாசியூடிகல்ஸ் கெமிஸ்ட்ரி டெக்னாலஜி, பாலிமர் இன் ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி மற்றும் பர்பியூரி பிளேவர் டெக்னாலஜி, பயோ புராசஸ் டெக்னாலஜி, கீரின் டெக்னாலஜி மற்றும் புட் பயோ டெக்னாலஜி.

எம்.இ., -பிளாஸ்டிக் இன்ஜினியரிங்

முதுநிலை பார்மசி பிரிவில் எம்.பார்ம்., டிரக் டெலிவரி டெக்னாலஜி, மெடிசினல் கெமிஸ்டரி மற்றும் மெடிசினல் நேசுரல் புராடெக்ட்.

எம்.எஸ்சி., படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும்  டெக்ஸ்டைல் கெமிஸ்டரி

தகுதி: பொறியியல், தொழில்நுட்பம்  மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில், 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சேர்க்கை முறை: ‘கேட்’ / கிராஜூவேட் பார்மசி ஆப்ட்டிடியூட் டெஸ்ட்  (ஜி.பி.ஏ.டி.,) மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆராய்ச்சி மற்றும் டிப்ளமோ படிப்புகள்
ராசாயன துறையில் உள்ள அனைத்து  பாடப்பிரிவுகள், சிவில், எலட்ரிக்கல், எலட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் அறிவியல் பிரிவிலும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. முதுநிலை டிப்ளமோ படிப்பில், கெமிக்கல் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: www.ictmumbai.edu.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us