நாட்டின் முதல் சுகாதார பள்ளி ‘ஏ.ஐ.ஐ.எச்.பி.எச்.,! | Kalvimalar - News

நாட்டின் முதல் சுகாதார பள்ளி ‘ஏ.ஐ.ஐ.எச்.பி.எச்.,!மார்ச் 07,2018,13:11 IST

எழுத்தின் அளவு :

பொது சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவை தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும், ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹைஜீன் அண்ட் பப்ளிக் ஹெல்த்’, நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது!

பல்வேறு நிலைகளுக்குப் பிறகு, கொல்கத்தாவில், 1932ம் ஆண்டில் முழுவடிவம் பெற்ற இந்நிறுவனம், இந்தியாவின் மட்டுமின்றி தென்கிழக்கு ஆசிய பகுதிகளின் முதல் பொது சுகாதார கல்வி நிறுவனம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது. மாநில அரசுகள், மத்திய அமைச்சகம் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பொது சுகாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, உயர் தரமான ஆரோக்கியம் மற்றும் சுகாதார அடிப்படை தேவைகளை தெளிவுபடுத்தும் வகையில் குறுகிய கால படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்கிவருகிறது.

துறைகள்
முறையான அடிப்படை செயல்முறை பயிற்சியுடன் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து, பொது சுகாதார சேவைகளுக்கான திறமையான பணியாளர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு நடைமுறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பாயோ கெமிஸ்டரி அண்ட் நியூட்ரிஷன், எப்பிடர்மாலஜி, மெடர்னல் அண்ட் சைல்டு ஹெல்த், மைக்ரோ பயோலஜி, ஆக்குபேஷனல் ஹெல்த், பிரவென்டிவ் அண்ட் சோசியல் மெடிசன், பப்ளிக் ஹெல்த் அட்மிஷன், பப்ளிக் ஹெல்த் நர்சிங் மற்றும் ஸ்டடிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்
எம்.டி.,-கம்யூனிட்டி மெடிசின், மாஸ்டர் ஆப் இன்ஜினியரிங் பப்ளிக் ஹெல்த், மாஸ்டர் ஆப் பப்ளிக் ஹெல்த் -எபிடர்மாலஜி, எம்.எஸ்சி.,-அப்லைடு நியூட்ரிஷன், மாஸ்டர் இன் வெட்னரி பப்ளிக் ஹெல்த், டிப்ளமா இன் ஹெல்த் புரோமோஷன் அண்ட் எஜூகேஷன், டிப்ளமா இன் ஹெல்த் ஸ்டடிஸ்டிக்ஸ், டிப்ளமா இன் இன்டஸ்டிரியல் ஹெல்த், டிப்ளமா இன் டைட்டிக்ஸ், டிப்ளமா இன் மெடர்னிட்டி அண்ட் சைல்டு வெல்பேர், டிப்ளமோ இன் பப்ளிக் ஹெல்த் மற்றும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் பப்லிக் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சேர்க்கை முறை
குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். இதர படிப்புகளுக்கு பல்கலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

உதவித்தொகை
எம்.டி.,-கம்யூனிட்டி மெடிசின் மற்றும் டிப்ளமா இன் பப்ளிக் ஹெல்த் ஆகிய படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கு, மாதம் ரூபாய் 15 ஆயிரம் முதல் 39 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. டிப்ளமா இன் டைட்டிக்ஸ், டிப்ளமா இன் ஹெல்த் புரோமோஷன் அண்ட் எஜூகேஷன், டிப்ளமா இன் ஹெல்த் ஸ்டடிஸ்டிக்ஸ் மற்றும் மாஸ்டர் இன் வெட்னரி பப்ளிக் ஹெல்த் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

விபரங்களுக்கு: http://aiihph.gov.in

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us