பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு இப்போது அதிக அளவில் பேசப்படுவதை அறிகிறேன். இது பற்றி கூறலாமா? | Kalvimalar - News

பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்பு இப்போது அதிக அளவில் பேசப்படுவதை அறிகிறேன். இது பற்றி கூறலாமா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பயோமெடிக்கல் துறையில் இன்று அதிகம் பயன்படுவது பயோஇன்பர்மேடிக்ஸ் திறன்கள் தான். பயாலஜிக்கல் தகவல்களை கம்ப்யூட்டர் திறன்களையும் உயிரியல் ஞானத்தையும் பயன்படுத்தி ஆய்வுகளுக்காக இந்தத் துறையில் பயன்படுத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இத்துறையில் பி.டெக்., பட்டப்படிப்பு தரப்படுகிறது.

பி.எஸ்சி., தகுதி பெற்றிருப்பவருக்கு இத் துறையில் பட்ட மேற்படிப்புகள் உள்ளன. இதில் தரப்படும் பட்டயப் படிப்புகளுக்கு எம்.எஸ்சி., முடித்திருப்பவர் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். இயற்பியல், வேதியியல், கணிதம், பயோடெக்னாலஜி, பயோபிசிக்ஸ், பாட்டனி, சுவாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பார்மசி, கால்நடை மருத்துவம் போன்றவற்றில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு முடித்திருப்பவர் பயோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.டெக்., படிப்பில் சேரலாம்.

பொதுவாக இத்துறையின் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கை நடத்தப்படுகிறது. பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பிளஸ் 2 தரத்திலான கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல் கேள்விகளைக் கொண்டிருக்கும்.

பயோஇன்பர்மேடிக்ஸ் எம்.எஸ்சி., படிப்பை புனே பல்கலைகழகம் நடத்துகிறது. அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைகழகம், கோல்கட்டா பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம் ஆகியவை நடத்துகின்றன.

பொதுவாக நுழைவுத் தேர்வுகள் மேஜூன் மாதங்களில் நடத்தப்படுகின்றன

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us