சாட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் பற்றி தகவல் கூறவும் | Kalvimalar - News

சாட் எனப்படும் ஸ்காலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் பற்றி தகவல் கூறவும்ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் வெளிநாட்டினர் கட்டாயம் தகுதி பெற வேண்டிய தேர்வு இது. ஆண்டுக்கு உலகெங்கும் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இதில் சாட் ரீசனிங் தேர்வு மற்றும் சாட் பாடத் தேர்வு என 2 உள்ளது. இந்தியாவில் இந்தத் தேர்வை பல இடங்களில் எழுத முடியும். தமிழகத்தில் கொடைக்கானல் இன்டர்நேஷனல் ஸ்கூல், சென்னை யு.எஸ்., கல்வி நிதி அமைப்பு ஆகிய இடங்களில் இதை எழுதலாம்.

அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்கள் தங்களது படிப்பில் சேர விரும்புவோர் இந்த சாட் தேர்வுகள் இரண்டிலும் தகுதி பெற்றவரை எடுத்துக்கொள்கின்றன. சில பல்கலைக்கழகங்களுக்கு ரீசனிங் தேர்வு தகுதி இருந்தாலே போதும். எந்த பாடத்தில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறோமோ அந்த பாடத்தில் சாட் தேர்வு தகுதியை வேறு சில பல்கலைக்கழகங்கள் கோருகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 6 தடவை இது நடத்தப்படுகிறது.

சாட் ரீசனிங் தேர்வில் ரீடிங் காம்ப்ரிஹென்ஷன், சென்டன்ஸ் கம்ப்ளீசன்போன்றவை ஒரு பகுதியாகவும் கணிதம் மற்றொரு பகுதியாகவும் ஆங்கில இலக்கணம், வார்த்தை பயன்பாடு போன்றவற்றிலிருந்து 3வது பகுதியும் இடம் பெறும்.

சாட் பாடத் தேர்வில் 22 பாடங்களில் தேர்வை எழுத முடியும். இலக்கியம், அமெரிக்க வரலாறு, உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், மொழிகள் ஆகியவை இந்த 22 பாடங்களில் உள்ளன.

சாட் தேர்வில் ஒரு தடவை வெற்றி பெறவில்லை என்றாலும் திரும்ப எழுதலாம். இந்தத் தேர்வு பற்றிய முழு விபரங்களை அமெரிக்க கல்வி தகவல் உதவி மையத்தில் பெறலாம். இதை www.collegeboard.com என்னும் இன்டர்நெட் தளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us