இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு வெளிநாடுகளில் எத்தனை ஆண்டுகள்? | Kalvimalar - News

இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு வெளிநாடுகளில் எத்தனை ஆண்டுகள்?செப்டம்பர் 27,2013,09:56 IST

எழுத்தின் அளவு :

நம் நாட்டில், கலை-அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை மேற்கொள்ள ஆகும் காலஅளவுகள் மாறுபடுகின்றன.

இதேபோல், நம் நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் ஒப்பிட்டால், அந்தப் படிப்புகளை மேற்கொள்ள ஆகும் கால அளவுகளில் பல மாறுதல்கள் இருக்கும்.

இங்கே, சில முக்கிய நாடுகளில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை மேற்கொள்ள ஆகும் காலஅளவுகள் குறித்து அலசலாம். இதன்மூலம், வெளிநாடு சென்று உயர்கல்வியை மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு, பயனுள்ளதாக அமையும்.

பிரிட்டன்

இந்நாட்டில், இளநிலைப் படிப்பிற்கு 3 ஆண்டுகளும், முதுநிலைப் படிப்பிற்கு 1 ஆண்டும் செலவழிக்க வேண்டும். அறிவியல் மற்றும் பொறியியலில், இளநிலைப் பட்ட நிலை மற்றும் அட்வான்ஸ்டு டிகிரி நிலை ஆகிய இரண்டு தகுதிகளையும் உள்ளடக்கி வழங்கப்படும் Integrated படிப்புகள், முதுநிலைப் பட்ட நிலையிலானவை.

தொழில்துறையில் ஆப்ஷனல் வருடத்தை உள்ளடக்கிய பல இளநிலைப் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், ஏதேனும் ஒரு நிறுவனத்தில், தாங்கள் சார்ந்த துறையிலேயே, அனுபவத்தைப் பெறுவதுடன், வருமானத்தையும் பெறுகிறார்கள்.

அமெரிக்கா

சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளைத் தவிர, இதர அனைத்து இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கும், இந்நாட்டில், 4 ஆண்டுகள் ஆகும். ஏனெனில், சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய படிப்புகள் இங்கு இளநிலை அளவில் வழங்கப்படுவதில்லை.

ஒரு முழுநேர முதுநிலைப் பட்டப் படிப்பு, இரண்டு அகடமிக் ஆண்டுகளை உள்ளடக்கியது. பகுதிநேர படிப்புகள், பொதுவாக, 2.5 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும். சில மாணவர்கள், accelerate அல்லது decelerate ஆகிய வாய்ப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து கொள்கிறார்கள்.

ஜெர்மனி

இந்நாட்டைப் பொறுத்தவரை, இளநிலைப் படிப்பிற்கு 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகிறது. அதேசமயம், முதுநிலைப் படிப்பை எடுத்துக்கொண்டால், 2 ஆண்டுகள் என்றாலும், அப்படிப்பு, முழுநேரமா, பகுதிநேரமா, செமஸ்டர் அடிப்படையிலானதா அல்லது இன்டர்ன்ஷிப் அடிப்படையிலானதா என்பதைப் பொறுத்து கால அளவுகள் மாறுபடும்.

ஆஸ்திரேலியா

பொறியியல் படிப்பைத் தவிர, ஆஸ்திரேலியாவில், அனைத்து இளநிலைப் படிப்புகளுக்கும் 3 ஆண்டுகள்தான் காலஅளவாகும். பொறியியல் இளநிலைப் படிப்பு 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.

மேலும், சிலவகை அறிவியல் மற்றும் மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கு, 5 ஆண்டுகள் வரையும் ஆகும். அதேசமயம், அந்நாட்டில் வழங்கப்படும் பல முதுநிலைப் படிப்புகளுக்கான காலஅளவு 1.5 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் மட்டுமே.

சிங்கப்பூர்

இந்நாட்டின் உயர்கல்வி அமைப்பு, பெரும்பாலும் இந்திய உயர்கல்வி அமைப்பை ஒத்ததுதான். இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு, 3 முதல் 4 ஆண்டுகள் வரையும், முதுநிலைப் படிப்புகளுக்கு 2 ஆண்டுகள் வரையும் ஆகிறது.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us