நானோ நுட்பத்தில் "டெங்கு" கண்டறியலாம் | Kalvimalar - News

நானோ நுட்பத்தில் "டெங்கு" கண்டறியலாம்செப்டம்பர் 27,2013,08:27 IST

எழுத்தின் அளவு :

காரைக்குடி: காரைக்குடி, "சிக்ரி" நிறுவன நாள் விழா நடந்தது. விஞ்ஞானி பழனிச்சாமி வரவேற்றார். சென்னை, வேல்டெக் டெக்னாலஜி பல்கலை வேந்தர் பேசியதாவது: டி.என்.ஏ., அடிப்படையில் அமைந்த "நானோ" தொழில்நுட்ப "சென்சார்" மூலம், மலேரியா, "டெங்கு", எச்.ஐ.வி., புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை விரைந்து கண்டறியலாம். உலக அளவில், 41 சதவீதத்தினர் இதை பயன்படுத்துகின்றனர்.

இம்முறைகளை, இந்தியா போன்ற நாடுகள் பயன்படுத்தினால், நோய்களின் தன்மையை துல்லியமாக கண்டறியலாம். இதற்கான, ஆராய்ச்சிகளில், இளம் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும், என்றார். "சிக்ரி" இயக்குனர் விஜயமோகனன் பிள்ளை, நிர்வாக கட்டுப்பாட்டு அதிகாரி கிறிஸ்துராஜ் பங்கேற்றனர்.

Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us