லண்டன்: இணையதளம் மூலம், இலவசமாக திறந்த நிலைக் கல்வியை மாணவர்களுக்கு வழங்க பிரிட்டனின் பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் முன்வந்துள்ளன. மொபைல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், இந்த இலவச கல்வியை, மாணவ மாணவியர், தங்கள் வீட்டில் இருந்தபடியே பெறலாம்.
இப்புதிய கல்விமுறை, இம்மாதம், 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. "எதிர்காலக் கற்றல்" என்றழைக்கப்படும் இப்புதிய கல்வித்திட்டத்தின் மூலம், பிரிட்டன் பல்கலைக் கழகங்கள், உலக சந்தையில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளன.
இது குறித்து, பிரிட்டன் கல்வி அமைச்சர், டேவிட் வில்லிடிஸ் கூறியதாவது: இப்புதிய கல்வித் திட்டத்தின் மூலம், அடிப்படை கல்வியில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். இத்திட்டத்தை, பிரிட்டனில், டப்ளின் பல்கலைக் கழகம், ஆஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலை, உட்பட, 21 பல்கலைக் கழகங்கள், வழங்க முன்வந்துள்ளன.
இந்த புதிய கல்வித் திட்டங்களுக்கான பாடத்திட்டங்கள், இணைய தளத்திலேயே கிடைக்கும். இப்புதிய பாடதிட்டங்களை, பர்மிங்காம், நாட்டிங்காம், வார்விக், பிரிஸ்டல் உள்ளிட்ட பல்கலைக் கழகங்கள், தயாரித்துள்ளன. பிரிட்டிஷ் நூலகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் போன்றவற்றில் இருந்தும், மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம்.
திறந்த நிலை கல்வி மூலம், ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படும், இப்பாடத்திட்டத்தில், 20 விதமான, குறுகிய பாடத்திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இதில், எட்டு திட்டங்கள், இந்த ஆண்டு முதல் துவங்கப்படுகின்றன. இதன் மூலம், 20 ஆயிரம் மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய பாடத்திட்டங்களில் சேர்ந்து பயிலும் மாணவ மாணவியருக்கு வினாக்கள், சோதனை ரீதியாக, பன்னோக்கு அடிப்படையில் கேட்கப்படும். இதற்கு, எவ்விதமான முன் கல்வித்தகுதியும் தேவையில்லை. இந்த கல்வியை பெறும் மாணவர்களுக்கு எவ்விதமான சான்றிதழ்களும் அளிக்கப்பட மாட்டாது.
இருப்பினும், பல்கலைக் கழகங்களில் படித்த அனுபவமும், அறிவும் மாணவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே கிடைக்கும். கற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான வரையறைகளோ, எல்லைகளோ இல்லை. அதே நேரத்தில், பொருளாதாரத்தை மேம்படுத்த, அதிகப்படியான திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் அல்லது உலகின் எந்தவொரு நாட்டிலும் உள்ள பல்கலைக் கழகங்கள், மாணவர்களை பயிற்றுவிப்பதற்கும், ஆராய்ச்சி பணிக்கும் எவ்வித தயக்கமும் காட்டாமல் தாங்களாகவே முன் வரவேண்டும். புதிய வாய்ப்புகளை உருவாக்குவதில், பல்கலைக் கழகங்கள், முன்மாதிரியாக திகழவேண்டும்.
இணையதள கல்வியில், தற்போது, அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இதற்கு சவால் விடும் வகையில், பிரிட்டன் பல்கலைக் கழகங்கள் திகழ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஹாய் நான் சபரிஷ் நான் டிப்ளோம இன் ELECTRONICS அண்ட் COMMUNICATION 2012 PASSED OUT அவலான் TCHNOLOGIES 1 இயர் APPERENTICE COMPLETED BUT NOW I AM NO JOB ALL DIPLOMA STUDENTS LIFE IS ONE YEAR OR THREE YEAR APPERENTICE AGREEMENT THATS ALL NEXT COME OUT THE COMPANY NO JOB FOR THIS CANDIATES AND NO INCREMENT OUR SALARY
|
by SABARISH.B,India 2013-09-27 11:14:12 11:14:12 IST |