தமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன? | Kalvimalar - News

தமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இசைப் படிப்புகள் மிகப் பெரிய அளவில் பேசப்படாவிட்டாலும் இவற்றைப் படிப்பவர்களில் அதிக திறமையும் பயிற்சியும் உடையவர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்றைய மீடியா யுகத்தில் இசைத் திறமை உடையவர்கள் மிகவும் பெரிய அளவில் பிரகாசிப்பதைப் பார்க்கிறோம். எதைப் படித்தாலும் அதை மிகவும் சிறப்பாகப் படிக்க வேண்டும் என்பது தான் இன்றைய தாரக மந்திரம் அது இசைத் துறைக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இசை தொடர்பான படிப்புகளைப் படிக்கலாம்.

அண்ணாமலை பல்கலைகழகம், அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோம் சயன்ஸ் அண்ட் ஹையர் எஜூகேசன் பார் வுமன், பாரதிதாசன்

பல்கலைகழகத்தின் கலைத் துறை, திருவையாறு இசை கல்லூரி, சென்னை பல்கலைகழகத்தின் கலைத் துறை, மதுரை காமராஜ் பல்கலைகழகம், பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் பர்பார்மிங் ஆர்ட்ஸ், குவீன் மேரிஸ் காலேஜ்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us