என்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

என்னை எம்.எஸ்சி., மைக்ரோபயாலஜி படிக்குமாறு நண்பர்கள் கூறுகிறார்கள். இதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி?ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்றைய சூழலில் உணவு பதப்படுத்தும் துறை மற்றும் பார்மாசூடிகல் துறை ஆகியவற்றில் இந்த படிப்பு முடிப்பவருக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. மெடிக்கல் லேபரடரி டெக்னாலஜி துறையிலும் இந்த படிப்பு முடிப்பவர் தேவைப்படு கிறார்கள். இது தவிர பயோடெக்னாலஜிஸ்டாகவும், கிளினிகல் மெடிக்கல் ரைட்டராகவும், துறை ஆசிரியராகவும், தர உறுதியாளுனராகவும் இன்று பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. மைக்ரோ கெமிக்கல் அனலிடிகல் லேபரடரியிலும் பணி பெறலாம்.

பயோடெக்னாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ், செல்பயாலஜி, மாலிகூலர் பயாலஜி, ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆகிய துறைகளுக்கும் இந்தத் திறனே ஆதாரமாக இருப்பதால் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் இதை சராசரியாக படித்தால் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்காது. கடின உழைப்பு அவசியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us