சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து சாதனை | Kalvimalar - News

சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து சாதனை

எழுத்தின் அளவு :


தர்மபுரி: பிளஸ் 2 தேர்வில் பால் பண்ணையியல் பாடத்தில் தர்மபுரியை அடுத்த லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டு மற்றும் மூன்றாமிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.


மாநில அளவில் இரண்டாமிடம்: தர்மபுரியை அடுத்த லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பூபால் பால் பண்ணையியல் பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடத்தில் தேர்ச்சி பெற்றார். இவர் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 173, ஆங்கிலம் 172, உயிரியல் 197, செய்முறை இரு தேர்வுகளில் தலா 200 மொத்தம் ஆயிரத்து 78 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளியில் மூன்றாமிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


மாணவன் பூபால் நமது நிருபரிடம் கூறியதாவது: பால் பண்ணையியல் பாடத்தில் மற்ற பாடங்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி படித்தேன். காலை மற்றும் மாலை நேரங்களில் நான்கு மணி நேரம் படிப்புக்கு ஒதுக்குவேன். மாநில அளவில் ரேங்க் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து கால்நடை மருத்துவ படிப்பு படிக்க உள்ளேன்.


எங்கள் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை இல்லை. அதனால், விவசாயிகள் படும் துயரம் எனக்கு தெரியும். படித்த பின் கிராமங்களை சார்ந்து என் பணி இருக்கும். இவ்வாறு பூபால் கூறினார்.


இதே பள்ளி மாணவன் பெருமாள், பால்பண்ணையியல் பாடத்தில் 196 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் மின் விளக்கு வசதியில்லை என்பதால், சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்து மாநில ரேங்க் பெற்றுள்ள அவர் கூறியதாவது:


குடும்பத்தினர் விவசாயம் சார்ந்து இருப்பதால், விவசாயம் சார்ந்த படிப்பை எடுத்து படித்தேன். இப்பாடத்துக்கான தேர்வுக்கு முன் விடுமுறை அதிகம் இருந்ததால், தொடர்ந்து படித்ததால் மாநில அளவில் ரேங்க் பெற்று இருப்பது மகிழ்ச்சி கொடுத்துள்ளது.


என் வீட்டில் மின் விளக்கு கிடையாது. மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் நான்கு மணி நேரம் படித்தேன். விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் உணவு உற்பத்தியை பெருக்குவதே எனது லட்சியம். இவ்வாறு பெருமாள் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us