செப்டம்பர் 24 முதல் டி.இ.டி மறுதேர்வு விண்ணப்பங்கள் | Kalvimalar - News

செப்டம்பர் 24 முதல் டி.இ.டி மறுதேர்வு விண்ணப்பங்கள்செப்டம்பர் 23,2012,11:24 IST

எழுத்தின் அளவு :

சென்னை: டி.இ.டி., மறுதேர்வுக்கான விண்ணப்பங்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகின்றன.

முதன்மை கல்வி அலுவலர் சிவா தமிழ்மணி தனது அறிவிப்பில், "அக்டோபர் 14ம் தேதி, டி.இ.டி., மறுதேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 28ம் தேதி மாலை 5:30க்குள், சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும்" என, தெரிவித்துள்ளார்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 250 ரூபாய் கொடுத்தும், இதரபிரிவினர் 500 ரூபாய் கொடுத்தும், விண்ணப்பங்களைப் பெறலாம்.

Advertisement

வாசகர் கருத்து

அணைத்து பிரிவினருக்கும் கொடுத்தா கொறைஞ்சா போய்டுவீங்க
by veerasekar,India    24-செப்-2012 11:23:08 IST
TET தேர்வில் கனிணி அசிரியர்கள் தேர்வு எழுதலாமா என்று தகவல் தருமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறன்
by ரவிக்குமார்,India    24-செப்-2012 09:56:17 IST
என்ன
by ravee,India    23-செப்-2012 19:28:39 IST
முதல் பேப்பரில் தேர்ச்சி அடைவதற்கு எந்த,எந்த புத்தகங்களை படிக்க வேண்டும்? நன்றி
by ஷீலா .k ,India    23-செப்-2012 18:19:53 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us