ஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா? | Kalvimalar - News

ஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா?ஜூலை 16,2014,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக, ஒரு படிப்பிற்கு, ஒரே மாதிரியான பாடத்திட்டமே இருக்கும். அதேசமயம், ஆட்-ஆன் எனப்படும் துணை சேர்க்கைகளில் வித்தியாசம் இருக்கும். இவையே, பாடத்திட்டங்களில் வேறுபாடுகளை ஏற்படுத்தும் அம்சங்கள்.

உதாரணமாக, இரண்டு பல்கலைகளுக்கு, ஆங்கிலப் பாடத்திற்கான பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும்போது, ஒரு பல்கலையில், மொழிபெயர்ப்பு தொடர்பான ஒரு additional புத்தகம் இருந்தால், இன்னொரு பல்கலையில் ஒன்று அல்லது இரண்டு additional புத்தகங்கள், ஜர்னலிசம் அல்லது கணினி தொடர்பாக இடம் பெற்றிருக்கும். இதுதான் முக்கிய வித்தியாசமே என்று ஒரு தரப்பார் கூறுகின்றனர்.

அதேசமயம் இன்னொரு தரப்பார் வேறுமாதிரி கூறுகின்றனர். அதாவது, ஒரே படிப்பை வழங்கும் இருவேறு பல்கலைகளின் பாடத்திட்டங்களில் கட்டாயம் வேறுபாடு இருக்கும் என்பது அவர்களின் கருத்து. பாட உபகரணங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கும்.

பாடத்திட்ட உள்ளடக்க விரிவு மற்றும் ஆழம் ஆகிய அம்சங்கள் தவிர, சந்தை நிலைமைக்கேற்ற வகையிலான மாற்றங்கள் விஷயத்திலும் வேறுபாடுகள் நிலவும்.

தொலைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை, சுயமாகவேப் படித்து, பாடத்தின் கருத்துக்களை தங்களின் சொந்த முயற்சியாலேயே புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், இம்முறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மிகவும் குறைவே.

எனவே, தொலைநிலைக் கல்வியை வழங்கும் பல பல்கலைகளும், தங்களின் தொலைநிலைக் கல்விக்கான உபகரணங்களை, எந்தளவு எளிதாக வடிவமைக்க முடியுமோ, அவ்வளவு எளிதாகவே வடிவமைக்கின்றன. பணிபுரிந்து கொண்டு, கிடைக்கும் நேரத்தில் படிக்கும் நபர்களின் சிரமத்தைப் போக்குவதே பிரதான நோக்கம்.

வெவ்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் ஒரே பாடங்கள், பெயர் மற்றும் செமஸ்டர் ஆகிய அடிப்படைகளில் வேறுபடுகின்றன. சில பல்கலைகள், ஒரு படிப்பில், நேரடி கல்வி முறையில் வழங்கப்படும் பாடங்களில் என்ன தரம் இருக்கிறதோ, அதே தரம், தொலைநிலைக் கல்வியிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று தீவிர முயற்சிகளும் எடுக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us